சென்னை மதுரவாயல் புறவழிசாலையில் கோயம்பேட்டிலிருந்து சேலம் நோக்கி 20 பயணிகளுடன் அரசுப் பேருந்து தாம்பரம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்தை முந்தி செல்ல முயன்ற அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த மினி வேன், நிலைதடுமாறி பேருந்தின் பக்கவாட்டில் மோதியது. இதில் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு எதிர் திசை சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வேனிலிருந்த அரிசி மூட்டைகள் சாலையில் சிதறின. இதனை கண்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் பேருந்தை உடனடியாக சாலையின் ஓரத்தில் நிறுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கபட்டது.
இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், வேனில் வந்த இருவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிக்கிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர், விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் .