ETV Bharat / state

ஆதலால் காதல் செய்வீர்!

ஒரு மனிதன் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எதனைப் பின்பற்ற வேண்டும், எங்கு வாழ வேண்டும் என்ற அனைத்து அடிப்படையான விஷயங்களையும் யாரோ ஒரு தரப்பிரனர் கற்பித்துக்கொண்டு, மனித உரிமைக்கு எதிராக செயல்படுகின்றனர். ஆனால், மற்றொரு தரப்போ அவர்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டே இருக்கின்றனர்.

ஆதலால் காதல் செய்வீர்! - காதலர் தின சிறப்பு தொகுப்பு

author img

By

Published : Feb 13, 2022, 1:22 PM IST

Updated : Feb 14, 2022, 11:28 AM IST

பிப்ரவரி மாதம் என்றாலே உலகில் உள்ள மக்கள் அனைவரும் உற்சாகமடையும் ஒரு தினம்தான் காதலர் தினம் (வேலண்டைன்ஸ் டே). காதல் உயிர்கள் அனைத்திடமும் இருக்கும் ஒரு அழகான உணர்வு. இருப்பினும் சில அடிப்படைவாத சிந்தனையுடையவர்கள் காதலர் தினம் கொச்சையானது எனக் கருத்துக்களைக் கூறிக்கொண்டும், ஒரு அமைப்பாக திரண்டு காதலர் தினத்தன்று பொது இடங்களில் தென்படும் காதல் ஜோடிகளை மிரட்டிக் கொண்டும் உலா வருகின்றனர்.

21ஆம் நூற்றாண்டிலும் காதலைப் புரிந்து கொள்ளாத காட்டுமிராண்டித்தனம் இருக்கும் நிலையில், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும்.

காதலர் தினம் என்ற காவிய தினம்!

கி.பி., 270ஆம் ஆண்டில் ரோமப் பேரரசின் ஆட்சியில் போர் புரிவது மட்டுமே ஆண்களின் பிரதான வேலை. காதல், கல்யாணம் போன்றவைக்கு அரசு தடைவிதித்திருந்தது. அப்போது, செயிண்ட் வேலண்டைன் என்பவர் அரசிற்கு எதிராக தேவாலயத்தில் காதல் ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்தார். இதனை அறிந்த அரசர், வேலண்டைனின் தலையைத் துண்டித்து தண்டனை வழங்கினார். செயிண்ட் வேலண்டைன் பிப்ரவரி மாதம் மத்தியில் இறந்ததால் அவரின் நினைவாக, பிப்ரவரி 14ஆம் தேதியை 'வேலண்டைன்ஸ் டே'ஆக கொண்டாடுகிறோம்.

நமது சமுதாயத்தில் அவரவர் விருப்பப்படி வாழ்வதையே குறைக் கூறுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஒரு மனிதன் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எதனைப் பின்பற்ற வேண்டும், எங்கு வாழ வேண்டும் என்ற அனைத்து அடிப்படையான விஷயங்களையும் யாரோ ஒரு தரப்பிரனர் கற்பித்துக்கொண்டு, மனித உரிமைக்கு எதிராக செயல்படுகின்றனர். ஆனால், மற்றொரு தரப்போ அவர்களின் உரிமைக்காகப் போராடிக் கொண்டே இருக்கின்றனர்.

காதலிப்பதும் , காதலிக்கப்படுவதும் மனிதனின் தனிப்பட்ட உரிமை. அதனை எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் உறுதியுடன் போராடவே வேண்டும்.

போர்க்களத்திலும் பூக்கள் பூக்கும்! கல் மனதிலும் காதல் பூக்கும்! ஆதலால் காதல் செய்வீர்...

இதையும் படிங்க:வெளியானது “காத்து வாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தின் டீசர்!

Last Updated : Feb 14, 2022, 11:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.