சென்னை மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் கீழ் வளசரவாக்கம், பெருங்குடி ஆகிய இடங்களில் செயல்படும் சமுதாய நல்வாழ்வு மையங்கள் வரும் 21ஆம் தேதி முதல் சிறப்பு தனிக்காய்ச்சல் பிரிவு மருத்துவமனைகளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மையங்களிலும் தலா 100 படுக்கை வசதிகளுடன் 24மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும் எனவும், மாநகராட்சி மருத்துவமனைகள் போலவே இங்கும் சிகிச்சைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்று நோய்த் தடுப்பு, கர்ப்பகால சிகிச்சைகள், டெங்கு, மலேரியா உட்பட அனைத்து பாதிப்புகளுக்கும் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள இந்த மருத்துவமனைகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சியால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிங்க: டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த தலைமைச் செயலர்