சென்னை பெருநகர மாநகராட்சி வளசரவாக்கம் 11வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் பல டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றது. இவற்றை சேகரிக்க குப்பை லாரிகள், ஹைட்ராலிக் இயந்திரங்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பகுதிகளில் இயங்கி வருகின்றன.
இந்த வகனங்கள் நிறுத்துவதற்கும், பராமரிப்பதற்கும் இடமில்லாத காரணத்தால் வளசரவாக்கம் மண்டல அலுவலகத்தின் அருகே நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் மண்டல அலுவலகம் அருகே துர்நாற்றம் வீசுவதாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் பொதுக்கள் பெரிதும் பாதிப்படைவதாகவும் எனவே வாகன நிறுத்துமிடத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், பூந்தமல்லி மவுண்ட் சாலையிலுள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் ரூ 38 லட்சம் செலவில் துப்புரவு வாகனங்கள் நிறுத்துமிடம், பழுது நீக்கும் நிலையம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை போன்றவை தற்காலிகமாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணியை ஊரக தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின் தொடங்கிவைத்தார். துப்புரவு வாகனங்கள் நிறுத்த தற்காலிகமாக இந்த பணிமனை செயல்படும் உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் நிரந்தரமாக வேறு இடத்தில் அமைக்கப்படும் என்றார்.
இதையும் படிங்க : விவசாயிகளை வாழவைக்கும் மண்புழு முதலமைச்சர் - செங்கோட்டையன்