ETV Bharat / state

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டுப்படுத்தாது - வைத்திலிங்கம் - Vaithilingam

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஓ.பன்னீர்செல்வத்தை கட்டுப்படுத்தாது என சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்
author img

By

Published : Jul 12, 2022, 3:11 PM IST

சென்னை: பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு முன்னாள் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "அதிமுகவில் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையிலேயே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அடிப்படை தொண்டர்களால் ஒற்றை வாக்கு முறையில் தேர்வு செய்யப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர்களின் பதவி 5 ஆண்டு கால பதவி, அதை பொதுக்குழுவால் நீக்க முடியாது.

தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்: நேற்று நிறைவேற்றப்பட்ட எந்த தீர்மானமும் செல்லாது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பன்னீர்செல்வத்தை கட்டுப்படுத்தாது. அதை தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும் தற்பொழுதும் கட்சியில் ஒருங்கிணைப்பாளர், பொருளாளராக இருப்பதாக கூறி ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.

துரோகம்: ஜெயலலிதாவுக்கு பிறகு பொதுச் செயலாளர் பதவியே கிடையாது என்பதால் ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்துள்ளார் எடப்பாடி பழனிசாமி , தன்னை முதலமைச்சர் ஆக்கிய சசிகலாவுக்கும் துரோகம் செய்ததை போல் 4 ஆண்டுகள் தனக்கு உறுதுணையாக இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்துள்ளார்.

ஒருங்கிணைப்பாளர் கட்சி அலுவலகம் சென்ற போது எடப்பாடி ஆதரவாளர்கள் கற்களை வீசினர். ரவுடிகளை 5 நாளாக அங்கு தங்க வைத்திருந்து அட்டூழியம் செய்தனர். எனவே எங்களை குறை சொல்ல அவர்களுக்கு தகுதியில்லை"என கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக தலைமை அலுவலகத்தின் சீலை அகற்றக் கோரி அவசர மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.