ETV Bharat / state

கதாநாயகன் அடி வாங்கினாலும் கடைசியில் வில்லனை ஒரே அடியில் வீழ்த்தி விடுவார் - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்! - Update admk news in tamil

OPS supporter Vaithilingam: கதாநாயகன் படத்தின் துவக்கத்தில் வில்லனிடம் அடி வாங்குவது போலதான் இருக்கும். ஆனால், படத்தின் முடிவில் வில்லனை கதாநாயகன் ஒரே அடியில் வீழ்த்தி விடுவார், இது எடப்பாடி விவகாரத்தில் நடக்கும் என வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

vaithilingam-interviewed-after-consultation-led-by-ops
கதாநாயகன் அடி வாங்கினாலும் கடைசியில் வில்லனை ஒரே அடியில் வீழ்த்தி விடுவார் - ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2023, 4:20 PM IST

சென்னை: அஇஅதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னையால் ஓ.பி.எஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து, அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என ஓபிஎஸ்-க்கு அதிமுகவின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், தனது ஆதரவாளருடன் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓபிஎஸ் இன்று (நவ.09) ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் கூறும்போது, "அதிமுகவின் கரை வைத்த வேட்டியைக் கட்டுவது என்பது கட்சியில் இருக்கும் அவர்களது உரிமை மற்றும் அது அவரவர் விருப்பம். அதைத் தவறாக வெளியில் பரப்பி வருகின்றனர்.

ஓ.பி.எஸ்-ஐப் பொறுத்தவரை, கட்சியில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதிமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வர வேண்டும் என்பதுதான்” என்றார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும்போது சசிகலாவை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் கட்டாயமாக சசிகலாவை ஓ.பி.எஸ் சந்திப்பார், அது குறித்தும் நாங்கள் தெரிவிப்போம் என்றார்.

மேலும், ஏற்கனவே கூறியதுபோல ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் படத்தின் ஆரம்பத்திலிருந்து வில்லனிடம் தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டிருப்பார். ஆனால், சரியான நேரம் வரும்போது கதாநாயகன் வில்லனை ஒரே அடியில் எல்லாவற்றையும் முடித்து விடுவார். இது நடக்கும், பொறுத்திருந்து பாருங்கள்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "2026 தேர்தல் வரை ஆர்.எஸ்.பாரதியும், கனிமொழியும் காத்திருக்கட்டும்" - அண்ணாமலை ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.