ETV Bharat / state

வைரமுத்து - வானத்தின் நீலத்தை பேனாவுக்குள் ஊற்றியவர் - happy birthday vairamuthu

மகள்களின் பிரிதல் எழுதி வைக்கப்பட்ட ஒன்று. பெண்களை பெற்ற தந்தைகளுக்கு அது தெரிந்ததுதான். ஆனால், ஒரு தந்தை அந்த பிரிவுக்கு தன்னை எங்கிருந்து தயார்ப்படுத்திக்கொள்கிறான் என்ற கேள்விக்கு பெரும்பாலும் யாரிடமும் பதில் இருக்காது.

vairamuthu
vairamuthu
author img

By

Published : Jul 13, 2021, 6:33 PM IST

Updated : Jul 13, 2021, 7:08 PM IST

90களில் பிறந்த ஒருவர் இப்போது கிரிக்கெட்டில் யார் ரசிகராக இருந்தாலும் அவரது ரசனை புள்ளி சச்சினிடத்திலிருந்தும், சினிமாவில் இப்போது எந்த கதாநாயகனை அவருக்கு பிடித்திருந்தாலும் அவரது ரசனை புள்ளி ரஜினியிடமிருந்தும் ஆரம்பித்திருக்கும்.

அப்படி 90களில் பிறந்து இப்போது எழுதிக்கொண்டிருக்கும் பலரில் பாதி பேரின் ரசனை புள்ளி வைரமுத்துவிலிருந்து தொடங்கியது.

vairamuthu

வைரமுத்து, தமிழ் சினிமா வேறு பாதையில் தனது பயணத்தை ஆரம்பித்தபோதும், மாடர்னாக மாற ஆரம்பித்த காலக்கட்டத்திலும் பாடல்கள் எழுத வந்தவர். இளையராஜாவுக்கு எழுதிய தனது முதல் பாடலில், “வானம் எனக்கொரு போதி மரம்” என்று கூறி புத்தருடன் கை குலுக்கியவர்

கண்ணதாசன், வாலி என்ற இரண்டு ஆளுமைகளும் இயங்கிக்கொண்டிருந்தபோது ஒருவர் வந்து தனது ஆளுமையை நிரூபிப்பது அவ்வளவு சாதாரணமில்லை. அதை செய்துகாட்டினார் வைரமுத்து.

தமிழ் சினிமாவின் இசையை மடைமாற்றிய இளையராஜாவுக்கு வைரமுத்து தனது வரிகளால் துணை நின்றார்.

vairamuthu

”என்னமோ ராகம், என்னென்னமோ தாளம் தலைய ஆட்டும் புரியாத கூட்டம்”, ”சேரிக்கும் சேர வேணும் அதுக்கும் பாட்டு படி” என்று பாடறியேன் படிப்பறியேன் பாடலில் வைரமுத்து எழுதி, இளையராஜா எப்படி இசையை சாமானியர்களுக்காக மாற்றினாரோ அதேபோல் வரிகளையும் சாமானிய மொழிக்கு மாற்றினார்.

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் கண்ணதாசன் தத்துவ மொழி எழுதினார், வாலி வாழ்க்கை, கொண்டாட்ட மொழி எழுதினார், வைரமுத்து கிராமத்து மொழி எழுதினார்.

vairamuthu

அதுமட்டுமின்றி, வைரமுத்து வருகைவரை புதுக்கவிதையின் வாசம் திரைப்பாடல்களில் பட்டும் படாமல் இருந்தது. அவர் வந்துதான் சினிமா பாடல்கள் மேல் புதுக்கவிதையை முழுதாக போர்த்தினார். அறிவியல் விஷயங்களை ரசிகர்களின் காதுகளுக்குள் எளிதாக புழங்க வைத்தார்.

இளையராஜாவுடனான பிரிவுக்கு பிறகு பல இசையமைப்பாளர்களுடன் வைரமுத்து பணியாற்றியிருந்தாலும் ரஹ்மானின் வருகை அவரை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்து சென்றது. ரஹ்மானோடு வைரமுத்து கை கோர்த்திருந்த காலத்தில்தான் தமிழ் சினிமா பாடல்களுக்குள் புது புது வார்த்தைகள் அறிமுகமாகின.

vairamuthu

கவிஞனோ, பாடலாசிரியனோ பாத்திரத்தில் விழும் நீர் போல் இருக்க வேண்டும். வைரமுத்து எந்த பாத்திரத்துக்கும் பொருந்திப்போகக்கூடிய நீர்.

90களில் அவர் ரஹ்மானுக்கு மட்டுமில்லை தான் பணி செய்த அனைத்து இசையமைப்பாளர்களுக்கு சிறந்த வரிகளையே கொடுத்தார்.

முக்கியமாக ரஹ்மானுக்கு பிறகு வைரமுத்து போட்ட கூட்டணியில் வித்யாசாகர் முக்கியமானவர். வித்யாசாகர் இசையில் மெல்லிசை தூவினார்; வைரமுத்து தனது வரிகளால் வருடிக்கொடுத்தார்.

vairamuthu

தந்தைக்கும், மகளுக்கும் உள்ள பாசம் தனித்துவமானது. இன்றளவும் நா. முத்துக்குமார் எழுதிய ”ஆனந்த யாழை மீட்டுகிறாய்” பாட்டு மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு உணர்வு கீதமாக இருக்கிறது.

அந்தப் பாடல் எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது அபியும் நானும் திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய, ”வா வா என் தேவதையே” பாடல்.

vairamuthu

மகள்களின் பிரிதல் எழுதி வைக்கப்பட்ட ஒன்று. பெண்களை பெற்ற தந்தைகளுக்கு அது தெரிந்ததுதான். ஆனால், ஒரு தந்தை அந்த பிரிவுக்கு தன்னை எங்கிருந்து தயார்ப்படுத்திக்கொள்கிறான் என்ற கேள்விக்கு பெரும்பாலும் யாரிடமும் பதில் இருக்காது.

அதற்கு, ”பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகையை பார்த்துக்கொண்டேன்” என்று எழுதி பலரின் கேள்விக்கு வெகு இயல்பாக பதில் உரைத்திருக்கிறார்.

vairamuthu

ஒரு கவிஞனாக, தமிழ் ஆளுமையாக வைரமுத்துவை காண்பித்த கவிதைகளும், பாடல்களும் ஏராளம். ஆனால், அவரை ஒரு முழு தந்தையாக காண்பித்த பாடல், வா வா என் தேவதையே.

காதலுக்கும், கவிதைக்கும் பொய் எப்படி அழகோ அதே அழகு எளிமைக்கும் உண்டு. ஆனால் அதைவிட பேரழகு எளிமையில் பிரமாண்டம் கலப்பது.

vairamuthu

”காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் வானின் நீலம் கொண்டு வா பேனா மையும் தீர்ந்திடும்” என்ற பிரமாண்டத்தை மிக மிக எளிமையாக சொன்னவர் வைரமுத்து.

அவர், இப்போது தனது எழுத்தின் அந்திம காலத்தில் இருப்பதாக பலர் கூறுகிறார்கள். இருந்தாலும் அவர் பெய்யென பெய்யும் மழையாய் பொழிந்து கொண்டிருப்பார். ஏனெனில், அவர் வானத்தின் நீலத்தை பேனாவுக்குள் ஊற்றியவர். பிறந்தநாள் வாழ்த்துகள் வைரமுத்து...

இதையும் படிங்க: நா. முத்துக்குமார் - யாரும் பார்க்காத தருணங்களை வேடிக்கை பார்த்தவன்

Last Updated : Jul 13, 2021, 7:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.