ETV Bharat / state

பொருளாதாரத்தை கொடுத்தால் எல்லா நாளும் தேசிய கொடியை ஏற்றுவார்கள் என தெரிவித்த வைரமுத்து - கவிஞர் வைரமுத்து

பொருளாதாரத்தையும், கல்வியையும் கொடுத்தால் எல்லா நாளும் தேசிய கொடியை ஏற்றுவார்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தையும், கல்வியையும் கொடுத்தால் எல்லா நாளும் தேசிய கொடியை ஏற்றுவார்கள் - கவிஞர் வைரமுத்து

author img

By

Published : Aug 12, 2022, 10:50 PM IST

சென்னை: கேகே நகரில் டிஸ்கவரி புக் பேலஸ் வளாகத்தை கவிஞர் வைரமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, "இன்று சென்னை கேகே நகரில் டிஸ்கவரி புக் பேலஸ் என்னும் நிலையத்தை தகைசால் தமிழர் விருது பெறும் நல்லகண்ணு அவர்களும் நானும் தொடங்கி வைத்துள்ளோம்.

இதுபோல புத்தக நிலையங்கள் தமிழ்நாட்டின் எல்லா மாவட்ட தலைநகரங்களில் திகழ வேண்டும். தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் அதிகமாக உள்ளது என தமிழ்நாடு அரசு கவலைப்படுகிறது. நாம் வாசித்தல், கற்றல், படித்தல் என்ற புதிய போதையை இளைஞர்களுக்கு, மாணவர்களுக்கு உண்டாக்க வேண்டும். கல்வி கற்ற சமுதாயமும், கற்றுக் கொண்டுள்ள சமுதாயம் தான் மனித வளத்தை உருவாக்க முடியும்.

இந்த டிஸ்கவரி புக் பேலஸ் நிலையத்தை வாழ்த்துகிறோம். ’தலைசால் தமிழர்’ என்ற தமிழக அரசின் பெருமை மிகு விருதை பெற்றிருக்கும் நல்லகண்ணுவை பாராட்டுகிறோம் போற்றுகிறோம். அவரை வாழ்த்துகிறோம் என்று சொல்வதை விட அவரை வணங்குகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டது என நம்ப வேண்டாம். அண்மையில் பத்திரிகையில் ஒன்றில் படித்தேன் உலக நாடுகள் வாரத்தில் எத்தனை மணி நேரம் வாசிப்புவிற்கு நேரத்தை செலவழிகின்றன என்ற புள்ளி விவரம் அது, அதில் ஜப்பான் வாரத்திற்கு 4.16 நிமிடங்கள் மட்டும்தான் செலவழிக்கிறது. இங்கிலாந்து 5.18 மணி நேரமும், அமெரிக்கா 5.48 மணி நேரமும், சீனா 8 மணி நேரமும் செலவழிக்கிறது. வியப்பூட்டும் தகவல் இந்தியா வாரத்தில் வாசிப்புக்கு 10.4 மணி நேரம் செலவிட்டு உலகத்தில் வாசிப்பில் முன்னணியில் இந்தியா இருக்கிறது. இதை நாம் வளர்க்க வேண்டும்.

இல்லம் தோறும் தேசியக்கொடியை ஏற்றும் திட்டம் மக்களின் பொருளாதாரத்திற்கும், கல்விக்கும் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் மட்டும் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினால் போதாது, 365 நாளும் தேசியக் கொடிக்கு மக்கள் மரியாதை செலுத்த வேண்டும் என்றால், 140 கோடி மக்களிக்கு பொருளாதாரத்தையும், கல்வியையும் இந்த நாடு கொடுத்தால் நீங்கள் கேட்டுக் கொள்ளாமலேயே ஒவ்வொரு இந்திய குடிமகனும் எல்லா நாளும் தேசிய கொடியை ஏற்றுவார்கள்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: சுதந்திர தின கொண்டாட்டங்களில் கரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.