இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனித குலத்திற்கு வெளிச்சமாக, கருணை வெள்ளமாகத் திகழும் இயேசு பெருமானின் போதனைகளை நினைவுகூர்ந்து, மன ஆறுதல் பெறவும், மகிழ்ச்சி அடையவும், உலகம் முழுமையும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
சாதி மதங்களின் பெயரால், வெறுப்பும் பகையும் வளர்ந்து, அதன் விளைவாக, கலவரங்களும், ரத்தக் களறிகளும் மனித சமுதாயத்துக்குப் பேரபாயமாக அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில், இயேசுவின் கருத்துகள், சுயநலமும் பேராசையும் அலைக்கழிக்கும் இன்றைய உலகத்திற்கு நல்வழி காட்டுகின்றன.
“சாந்த குணம் உள்ளவர்களாக, நீதியின் மேல் பசி தாகம் உள்ளவர்களாக, சிறுமைப்படுகின்றவர்களுக்கு இரக்கம் உள்ளவர்களாக, இதயத்தில் சுத்தம் உள்ளவர்களாக, நீதியின் நிமித்தம் துன்பப்படுகின்றவர்களாக வாழ்கின்றவர்கள் பூமிக்கு உப்பாகவும், உலகத்துக்கு வெளிச்சமாகவும் இருப்பார்கள்” என்று இயேசு சொன்னதை ஏற்று வாழ்ந்த உத்தமர்கள் அவற்றை மெய்யாக்கி இருக்கின்றார்கள்.
சகோதரத்துவமும், மனித நேயமும், மக்கள் மனத்தில் மேலோங்க, கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அனைவரும் உறுதி மேற்கொள்வோம். இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சுங்கச்சாவடி கடக்க கட்டணம் வசூல்: கிராம மக்கள் நள்ளிரவில் முற்றுகை!