இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா நோய் பரவலைத் தடுக்க மார்ச் 24ஆம் தேதிமுதல் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இன்னும் நீடித்துவருகின்றது. நாடு முழுவதும் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அச்சத்தை உருவாக்கி, கோடிக்கணக்கான ஏழை, எளியோரின் வாழ்வாதாரங்களைப் பறித்துள்ள கரோனாவிலிருந்து மீள்வது எப்போது என்ற வினாவுக்கு இன்னும் விடை தெரியவில்லை.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் உள்ள 48-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் தொடரும் என்றும், அதில் 26 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 12 விழுக்காடு வரை கட்டணம் அதிகரிக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.
கரோனா தொற்று மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. எதிர்காலம் பற்றிய கவலை அதிகரித்துள்ள நிலையில், சுங்கச்சாவடி கட்டணம் வசூல், கட்டணம் அதிகரிப்பு என மத்திய அரசு மக்களை வாட்டிவதைப்பதை ஏற்கவே முடியாது.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூல்செய்வதை மத்திய அரசு உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களின் உயிர் காக்கும் மருத்துவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் - வைகோ