நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவிட வேண்டும் என வைகோ மாநிலங்களவையில் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக பேசிய அவர், “ உயர் நீதிமன்றங்கள் அளிக்கின்ற தீர்ப்பில், வழக்கு தொடுத்தவர்கள் நிறைவு அடையவில்லை என்றால், அவர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். ஆனால், தென்னிந்திய மக்கள் உச்ச நீதிமன்றத்தை எளிதில் நாடமுடிவதில்லை.
மொழி வேறுபாடு, அதிக தூரம், பயணத்தில் வீணாகும் நேரம், வழக்கறிஞர்களின் கட்டணங்கள் எனப் பல்வேறு காரணங்களால் தென்னிந்திய மக்கள் உச்ச நீதிமன்றத்தை நாடுவது சிரமமான காரியமாக உள்ளது. ஏழை, எளிய மக்களால் உச்ச நீதிமன்றத்திடம் இருந்து உரிய நீதியைப் பெற முடியவில்லை.
உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்குகளில் வட இந்தியாவிற்கு அடுத்தபடியாக தென் இந்தியா தான் உள்ளது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் நிரந்தரக் கிளையை தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்க வேண்டும்’’ என்று பேசினார்.
இதையும் படிங்க: டெல்லி காற்று மாசுபாடு: நாடாளுமன்றத்தில் வைகோ உரை!