மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியார்களை சந்தித்தார்,
அப்போது பேசிய அவர், 'சிதம்பரம் ஜாமினில் வெளிவந்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் அதிக நாள் கஷ்டப்பட்டு விட்டார் அதற்காக நான் கவலைப்பட்டேன். கோவையில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பரிதாபமாக இறந்த செய்தி மனதை வேதனைப்படுத்துகிறது. ஏற்கனவே அந்த சுற்றுச்சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விடலாம் என பொதுமக்கள் புகார் அளித்தும் அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுவர் கட்டியவர்களையும் கைது செய்யாமல் போராடிய ஏழை எளிய மக்களின் மீது தடியடி நடத்தி கைது செய்த காவல்துறைக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடாது என்பதற்காக திமுக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு அளிக்கவில்லை. வார்டுகள் பிரிக்காமல், இட ஒதுக்கீடுகள் முறையாக செய்யாமல், புதிய மாவட்டங்கள் உருவாக்கி மாவட்ட கவுன்சிலர்கள் எந்தெந்த பகுதி மற்றும் வாக்காளர்கள் யார் என்று எந்த முறையான அறிவிப்பும், அடிப்படை நடவடிக்கையும் எடுக்காமல் ஊராட்சிக்கு மட்டும் முன்கூட்டியே தேர்தல் அறிவித்திருப்பது ஜனநாயகத்திற்கு முற்றிலும் மாறான செயலாகும்' என்றார்.
இதையும் படிக்க: 'ரஜினி எப்போது கட்சி தொடங்குவார்?' - தமிழருவி மணியன் விளக்கம்