ETV Bharat / state

வேட்புமனு தாக்கல் செய்தார் வைகோ

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சட்டப்பேரவை செயலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வைகோ
author img

By

Published : Jul 6, 2019, 11:14 AM IST

Updated : Jul 6, 2019, 12:49 PM IST

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவிற்கு மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். இந்நிலையில், சட்டப்பேரவை செயலர் சீனிவாசனிடம் அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவைக்கு வரும் ஸ்டாலின்

அதேபோல், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இவர்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Intro:Body:ராஜ்ய்சபா தேர்தல் - வேட்புமனுத்தாக்கல்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக வேட்பாளர்கள் வில்சன், மற்றும் சண்முகம் ஆகியோர் தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்

தலைமைச் செயலகத்தில் ராஜ்யசபா தேர்தல் நடத்தும் அதிகாரியாக உள்ள சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர்

தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள திமுகவைச் சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.ராஜா, அதிமுகவைச் சேர்ந்த கே.ஆர்.அர்ஜுனன், மைத்திரேயன், ஆர்.லட்சுமணன், ரத்தினவேல் ஆகிய ஆறுபேரின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது

சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிமுகவில் இருந்து மூன்று பேரும், திமுக சார்பில் மூன்று பேர் ராஜ்யசபா உறுப்பினர்களாக தேர்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 1 ஆம் தேதி வெளியிட்டு அன்றைய தினம் முதலே வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது

ஒன்றாம் தேதி தொடங்கி 8 ஆம் தேதிவரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் எனவும், 9 ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அன்றைய தினம் மாலை 5 மணிக்கே தேர்தல் முடிவு தெரிவிக்கப்பட உள்ளது

அதன் அடிப்படையில் தற்போது வரை சுயேட்சை வேட்பாளர்களாக மூன்று பேர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்

இன்றைய தினம், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் வில்சன், தொமுச சண்முகம் ஆகியோர் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கின்றனர்

அதிமுக சார்பில் போட்டியிடக்கூடியவர்கள் வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டு வரும் திங்களன்று அவர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்Conclusion:
Last Updated : Jul 6, 2019, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.