ETV Bharat / state

இலங்கை கடற்படைத் தாக்குதல் - வைகோ கண்டனம் - இந்திய அரசு அலட்சியம்

தமிழ்நாடு மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இலங்கை கடற்படையைக் கண்டித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

Vaiko Condemnation on Tamil Nadu fishermen arrested by Sri Lankan navy

author img

By

Published : Dec 15, 2020, 1:45 PM IST

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உரிய அனுமதி பெற்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் சிலரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். சிலர் கைது நடவடிக்கைகளுக்கு அச்சமடைந்து இரவோடு இரவாக கரை திரும்பியுள்ளனர். இலங்கைக் கடற்படையின் இந்த அராஜகப் போக்கு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருவதாக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இலங்கைக் கடற்படை, தமிழ்நாடு மீனவர்களைக் கைதுசெய்வதும் அவர்களின் படகுகள், மீன்பிடி கருவிகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக நடந்துவருகின்றது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, இப்படகுகளை மீட்பதற்கு இந்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால், கடந்த நவம்பர் மாதம் இலங்கை நீதிமன்றங்கள் தமிழக மீனவர்களின் படகுகளை அழிப்பதற்கு உத்தரவிட்டன. அதன் பின்னரும் அவற்றை மீட்பதற்கு தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.

தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடிப்பதை முற்றிலும் தடைசெய்யும் நோக்கத்துடன், இலங்கை அரசு இலங்கை கடற் தொழில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்தது. இதன்படி, எல்லை தாண்டி மீன் பிடிக்க வரும் மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு, ரூபாய் 60 லட்சம் முதல் 1.75 கோடி இலங்கை ரூபாய் மதிப்பில் அபராதம் விதிக்கவும், இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவும் புதிய சட்டம் வழிவகை செய்கின்றது.

இச்சட்டம் குறித்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தேன். அதன்பின்னர் இலங்கை சென்ற பிரதமர் அந்நாட்டு அரசிடம் இலங்கைக் கடற் தொழில் சட்டம் குறித்து மீனவர்களின் கவலையை இலங்கை அரசிடம் பிரதமர் தெரிவிக்கவில்லை.

மீனவர்கள் விவகாரத்தில் இந்திய அரசு காட்டிவரும் அலட்சியத்தால் மீண்டும் மீண்டும் தமிழ்நாடு மீனவர்கள் இந்திய எல்லையிலேயே கைதுசெய்யப்படுவதும் இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாவதும், படகுகள் பறிமுதல்செய்யப்படுவதும் இன்றுவரை தொடர்கின்றன.

இந்நிலையில், இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்கவும், அவர்களது படகுகளை மீட்கவும் மத்திய அரசு முன்வர வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: கடல் முழுவதும் இலங்கை கடற்படை: அச்சத்தில் இரவோடு இரவாக கரை திரும்பிய மீனவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.