ETV Bharat / state

பெண்களே உங்களின் பிறப்புறுப்பு ஆரோக்கியமாக இருக்கிறதா? - பெண் பிறப்புறுப்பு ஆரோக்கியம்

பெண்களுக்கு தொடர்ந்து வரும் யோனி அழற்சியின் காரணமாக வேலைக்குச் செல்லாமல் இருப்பது, சமூக கூட்டங்களைத் தவிர்ப்பது போன்றவை சமூக தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். மேலும், இவர்கள் மக்களிடமிருந்து விலகி இருப்பதால் சுயமரியாதை குறைதல் மற்றும் தாழ்வு மனப்பான்மை காரணமாக மனநிலையையும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

Vaginal Health
Vaginal Health
author img

By

Published : Jul 5, 2020, 10:31 PM IST

பல்வேறு வயதிற்குட்பட்ட பெண்களுக்கு பெண்ணுறுப்பு ஆரோக்கியம்

உங்கள் அந்தரங்க பகுதிகளில் ஏற்பட்ட தவிர்க்கமுடியாத அசௌகரியம் காரணமாக ஒரு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டியிருந்ததா? அல்லது உங்கள் நண்பரின் கழிவறையை நீங்கள் பல முறை பயன்படுத்த வேண்டியிருக்கிறதா?

என்ன தவறு நேர்ந்தது? நீங்கள் அதை கண்டுபிடிக்க முடியுமா? பெண்கள் இந்த சிக்கல்களைப் பற்றி பேசுவதுதே அரிதாக இருப்பதால்தான், இது நீண்டகால பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. அதற்கான பதில்களைத் தேடும் முயற்சியில், ஒரு மகப்பேறியல் மகளிர் மருத்துவம் மற்றும் கருவுறாமை நிபுணருமான டாக்டர் பூர்வா சஹகரியிடம் பேசினோம்.

உங்கள் பிறப்புறுப்பு ஆரோக்கியத்தை அறிந்துகொள்வதும், தயக்கமோ கூச்சமோ இல்லாமல் இந்த சிக்கல்களைத் தீர்ப்பதில் நேர்மறையாக இருப்பது நிச்சயமாக உங்களுக்கு உதவும். தவறு மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை நாம் கையாள்வதற்கு முன், சாதாரண பிறப்புறுப்பு ஆரோக்கியம் என்றால் என்ன என்பதை நாம் ஏன் புரிந்துகொள்ள முயற்சிக்காமல் இருக்கிறோம்.

சாதாரண பிறப்புறுப்பு ஆரோக்கியம் என்றால் என்ன, சாதாரண வெள்ளைப்படுதல் போன்று ஏதாவது இருக்கிறதா?

பெண்களுக்கு பருவமடையும் வரை, பொதுவாக 10-16 வயது வரை, எந்த வெள்ளைப்படுதல் வெளியேற்றமும் இருப்பதில்லை. ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, அவை தோற்றத்தில் பிசுபிசுப்பான மிகக் குறைந்த வெளியேற்றத்தைக் கொண்டிருக்கும். மிகவும் அரிதாக, 10 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு அத்தகைய வெளியேற்றங்கள் உள்ளன.

மாதவிடாய் தொடங்கிய பிறகு, வெள்ளைப்படுதலின் முறை மாறுகிறது. இனப்பெருக்க வயது பெண்கள் மற்றும் சிறுமிகள், அவர்களின் மாதவிடாய் சுழற்சி முழுவதும் சாதாரண வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் சீரான தன்மையை கொண்டிருக்கின்றனர். வெள்ளைப்படுதல் என்பது மாதவிடாய் சுழற்சியின் முதல் பாதியில் இல்லாமலோ அல்லது குறைவாகவோ இருக்கும். இது சுழற்சியின் இரண்டாம் பாதியில் அண்டவிடுப்பின் பின்னர் (கருமுட்டையிலிருந்து முட்டையின் சிதைவு) மெல்லிய, தெளிவான வெள்ளை வெளியேற்றத்தின் அளவு அதிகரிக்கிறது. அது அசாதாரணமாகவோ அல்லது தொற்றுநோயாகாத வரை இந்த சாதாரண வெள்ளைப்படுதல் பொதுவாக எந்தவிதமான அறிகுறிகளையும் எரிச்சலையும் வாசனையையும் ஏற்படுத்தாது.

பெண் பெரிமெனோபாஸல் வந்தவுடன் (சுமார் 45 வயது) அல்லது மாதவிடாய் நிறுத்தத்தை அடையும்போது (45 முதல் 55 வயது வரை) வெள்ளைப்படுதல் குறைகிறது. இது முக்கியமாக ஹார்மோன் அளவு குறைவதன் காரணமாகும். இந்த வயதிற்குட்பட்ட பெண்கள் பொதுவாக பிறப்புறுப்பில் வறட்சி, அரிப்பு போன்றவை இருப்பதாக சொல்கிறார்கள். வெள்ளைப்படுதலில் இயல்பான அளவு, சீரான அல்லது சுழற்சி ஆகியவற்றில் எந்த மாற்றமும் அந்த குறிப்பிட்ட பெண்களுக்கு அசாதாரணமானது.

வெள்ளைப்படுதல் அளவு அதிகரிப்பு, மஞ்சள், அடர்த்தியான தயிர், பச்சை போன்ற வெளியேற்றத்தின் நிறத்தில் மாற்றம், பெரினியத்தில் அரிப்பு (கால்களுக்கு இடையில் உள்ள அந்தரங்க பாகங்கள்), துர்நாற்றம் வீசும் வெளியேற்றம் போன்றவை அசாதாரண வெள்ளைப்படுதல் அல்லது பிறப்புறுப்பின் ஆரோக்கியமின்மையின் அறிகுறிகளாக இருக்கலாம்.

மேலும், அந்தரங்க பகுதிகளில் ஈரப்பதம், வெள்ளைப்படுதல், வலி, வீக்கம் அல்லது அந்தரங்க பகுதிகளில் சிவத்தல் ஆகியவை பிற பிரச்னைகளாக இருக்கலாம்.

பிறப்புறுப்பில் தோன்றும் இதுபோன்ற அறிகுறிகளுக்கு காரணம் என்ன?

பிறப்புறுப்பில் எரிச்சல் இருப்பது யோனி அழற்சி என அழைக்கப்படுகிறது. யோனி அழற்சியில் இரண்டு வகைகள் உள்ளன. தொற்று மற்றும் தொற்று அல்லாதவை. தொற்று யோனி அழற்சி வருவதற்கான காரணங்களில் முக்கியமாக பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவை அடங்கும். தொற்று யோனி அழற்சியின் காரணத்தைப் பொறுத்து பெண்களின் அறிகுறிகள் மாறுபடும்.

ஒவ்வாமை அல்லது ஆடை, ரசாயனங்கள் - சோப்புகள், கிரீம்கள் போன்றவற்றால் ஏற்படும் எரிச்சல் போன்றவை தொற்று அல்லாத யோனி அழற்சி உண்டாவதற்கான காரணங்கள்.

இந்த நோய்த்தொற்றுகள் எவ்வாறு ஏற்படுகின்றன?

  • மோசமான பெரினியல் சுகாதாரம் (அந்தரங்க பாகங்கள்) - குறைவாக கழுவுதல், உலர வைக்காதது போன்றவை காரணங்கள்.
  • உள்ளாடை அணியாத பழக்கம் உள்ள பெண்களுக்கு பிறப்புறுப்பு, நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகிறது.
  • இறுக்கமான ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளை நீண்ட நேரம் அணிவது நோய்த்தொற்றுகளை அதிகரிக்கும்.
  • துவைக்காத ஆடைகளை மீண்டும் மீண்டும் அணிவது யோனி அழற்சியை ஏற்படுத்தும்.
  • எந்த அறிகுறிகளுக்கும் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதில் தாமதித்தல்
  • நோய்த்தொற்றுகளுக்கு எடுத்துக்கொண்ட சிகிச்சை முழுமை பெறாதது.
  • நீரிழிவு நோய், இரத்த சோகை அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வரும் நிலை போன்ற பிற மருத்துவ நிலைகளாகும்.
  • ஆண் இணையின் தொற்று (உடலுறவு செயலில் உள்ள பெண்களின் விஷயத்தில்).

எந்த சமயத்தில் நாம் ஒரு மருத்துவரை பார்க்க வேண்டும்?

வெள்ளைப்படுதலின் அளவு அதிகரித்தல், வெளியேற்றத்தின் நிறத்தில் மாற்றம், வெளியேற்றத்தின் துர்நாற்றம், உடலுறவின்போது சிரமம் அல்லது வலி, தொடர்ச்சியான முதுகுவலி, சிறுநீர் தொற்று (சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி போன்றவை), ஏதாவது வீக்கம், சிவத்தல், உங்கள் அந்தரங்க பகுதிகளில் அரிப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் நாம் மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.

அவ்வாறு மருத்துவரை பார்க்கவிட்டால் என்ன ஆகும்?

சிகிச்சையில் தாமதமானாலோ அல்லது அத்தகைய நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்காமல் இருந்தாலோ இந்த நோய்த்தொற்றுகள் கருப்பை மற்றும் ஃபலோபியன் குழாய்களுக்கு மேல்நோக்கி பயணித்து, குழாய்களில் அடைப்பு, கருப்பை நோய்த்தொற்றுகள் போன்ற சிக்கல்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பெண்களில் கருவுறாமைக்கு ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

தொடர்ந்து வரும் யோனி அழற்சியின் காரணமாக வேலைக்குச் செல்லாமல் இருப்பது, சமூக கூட்டங்களைத் தவிர்ப்பது போன்றவை சமூக தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். மேலும் இவர்கள் மக்களிடமிருந்து விலகி இருப்பதால் சுயமரியாதை குறைதல் மற்றும் தாழ்வு மனப்பான்மை காரணமாக மனநிலையையும் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இது ஒருவரின் உடலுறவு மற்றும் திருமண வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும்.

இதற்கான சிகிச்சைகள் என்ன?

ஒரு மருத்துவரை அணுகி தன்னை பரிசோதித்துக்கொள்வது அவசியம். சிகிச்சையானது வயது மற்றும் யோனி அழற்சி வகையைப் பொறுத்து மாறுபடும்.

சுயமான சிகிச்சை இந்த அறிகுறிகளை தற்காலிகமாகத் தணிக்கக்கூடும், ஆனால் முழுமையற்ற சிகிச்சை அல்லது தவறான சிகிச்சை பின்னர் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஒருவர் சுய சிகிச்சையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.முழுமையாக குணமடைவதற்கும், மீண்டும் வருவதைத் தவிர்ப்பதற்கும் சிகிச்சை முழுமையையும் நிறைவு செய்வது அவசியம்.

யோனி அழற்சி ஏற்படுவதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?

“பேக் ஸ்ட்ரோக்” முறையைப் பயன்படுத்தி கழிவறையை பயன்படுத்தியபின் ஒவ்வொரு முறையும் அந்தரங்க பாகங்களை முறையாகக் கழுவுவது, பிறப்புறுப்பில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தவிர்க்க பயனுள்ளதாக இருக்கும்.

பேக் ஸ்ட்ரோக் என்றால் முதலில் பிறப்புறுப்பை கழுவுதல், பின்னர் ஆசனவாயை கழுவுதல். இதனால் ஆசனவாயிலிருந்து கிருமிகள் பிறப்புறுப்பில் மாசுபடுத்துவதைத் தவிர்க்கலாம்.

எப்போதும் சுத்தமான உள்ளாடை அணியுங்கள். குறிப்பாக, கோடைக்காலங்களில் நீண்ட நேரம் இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிர்க்கவும். அந்தரங்க பாகங்களை உலர்வாக மற்றும் சுத்தமாக வைத்திருத்தல், அந்தரங்க பகுதிகளில் முடியை அடிக்கடி சீராக்குதல் போன்றவைகளாகும்.

மேலும், எரிச்சலூட்டும் ஆடை, கிரீம்கள் மற்றும் சோப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது. ஆணுறைகளைப் பயன்படுத்துவது பாலியல் நோய்த்தொற்று பரவுவதிலிருந்து தம்பதிகளைப் பாதுகாக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.