ETV Bharat / state

சிங்கமுத்து மீது நில மோசடி வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத வடிவேலு

நடிகர் சிங்கமுத்து மீது நில மோசடி தொடர்பான வழக்கில், குறுக்கு விசாரணைக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு இன்று (செப். 29) ஆஜராகாததால் (முன்னிலையாகாததால்) வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

vadivelu
vadivelu
author img

By

Published : Sep 29, 2021, 6:08 PM IST

சென்னை: 2007ஆம் ஆண்டு சபரி முத்து என்பவரிடம் நடிகர் சிங்கமுத்து கூறியதன் அடிப்படையில் தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியில் மூன்று ஏக்கர் 52 சென்ட் நிலத்தை வடிவேலு வாங்கியுள்ளார்.

தான் வாங்கிய இடத்தில் கழிவுநீர் பண்ணை வருவதால், அரசு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாகக் கூறி நடிகர் சிங்கமுத்து இந்த நிலத்தை விற்பனை செய்ய வேண்டும் எனத் தன்னிடம் கூறியதாக வடிவேலு தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், அசோக் நகர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தாம்பரத்தைச் சேர்ந்த சேகர் என்பவருக்குப் பொது அதிகார பத்திரத்தை வடிவேலு எழுதிக் கொடுத்துள்ளார். இந்த நிலத்தைப் பார்க்கவ் பவுண்டேஷன் என்ற நிறுவனத்திற்கு 20 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகக் கூறி, நடிகர் சிங்கமுத்து பணத்தை கொடுத்ததாக வடிவேலு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 2010ஆம் ஆண்டு வடிவேலுவிடம் வருமான வரி தணிக்கை செய்ய வந்தபோது, தாம்பரம் பெருங்களத்தூரில் வாங்கிய நிலத்தை ஒரு கோடியே 93 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாகவும் அது தொடர்பாக வரி செலுத்தப்படவில்லை எனவும் அலுவலர்கள் குற்றஞ்சாட்டினர்.

அப்போதுதான் சிங்கமுத்து, சேகர் என்ற ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபரோடு சேர்ந்து தன்னை மோசடி செய்தது வடிவேலுவுக்குத் தெரியவந்தது. இதனையடுத்து அவர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் நடிகர் சிங்கமுத்து, சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல்செய்யப்பட்டது. இதனடிப்படையில் எழும்பூர் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

விசாரணையில் நடிகர் வடிவேலு வருமான வரி ஏய்ப்பு செய்வதற்காக வேண்டுமென்றே தங்கள் மீது பழிபோடுவதாக நடிகர் சிங்கமுத்து, சேகர் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது.

இந்த நிலையில், விசாரணை தொடர்பாக இன்று (செப். 29) 14ஆவது மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி வடிவேலுவுக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது.

ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது நடிகர் வடிவேலு முன்னிலையாகவில்லை. இதனையடுத்து வழக்கை டிசம்பர் 7ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அன்றைய நாள் நடிகர் வடிவேலு குறுக்கு விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கலைத்தாயின் மீது சத்தியம் - சபதம் எடுத்த வடிவேலு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.