சென்னை: "கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு" என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கை மெட்ராஸ் ஐஐடி(IIT Madras) நடத்த உள்ளது. இது குறித்து ஐஐடி இயக்குனர் காமகோடி ஐஐடி வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்,
அப்போது பேசிய அவர், "ஜி 20 உறுப்பு நாடுகளின் கல்வி நிறுவனங்களின் இடையே ஆராய்ச்சி,கல்வி போன்றவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது ஜி20 கல்விபணிக்குழுவின் நோக்கம். ஜனவரி 31 ஐ ஐ டி ஆராய்ச்சி பூங்காவில் "கல்வியில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் பங்கு"என்ற தலைப்பில் ஜி20 கருத்தரங்கு நடைபெற உள்ளது.
பிப்ரவரி 1,2 ஆகிய தேதிகளில் ஜி20 முதல் கல்விப்பணி குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஐ ஐ டி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் 50 அரங்குகளுடன் கூடிய கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது. பிப்ரவரி 1 முதல் இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் கல்வி கண்காட்சியைப் பார்க்க அனுமதிக்கப்படுவர். ஜி 20 முதல் கல்வி பணிக்குழு கருத்தரங்கில் சிறப்புக் குழந்தைகளின் கல்விக்காக டிஜிட்டல் தொழில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும்.
கருத்தரங்கில் ஐ ஐ டி மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 200 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.தமிழகத்தின் பிற பகுதியிலிருந்து 100 கல்வியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஜி 20 கல்விப் பணிக்குழு கருத்தரங்கில் உறுப்பினர் நாடுகள்,விருந்தினர் நாடுகள்,சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
-
India has multiple official languages and we would like to have the lectures done in all the official languages says @iitmadras Director prof. V Kamakoti#G20India @PMOIndia @narendramodi @g20org @EduMinOfIndia @PIBHRD @MIB_India @PIB_India @airnewsalerts @DDNewslive pic.twitter.com/SRB2t9rAXL
— PIB in Tamil Nadu (@pibchennai) January 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India has multiple official languages and we would like to have the lectures done in all the official languages says @iitmadras Director prof. V Kamakoti#G20India @PMOIndia @narendramodi @g20org @EduMinOfIndia @PIBHRD @MIB_India @PIB_India @airnewsalerts @DDNewslive pic.twitter.com/SRB2t9rAXL
— PIB in Tamil Nadu (@pibchennai) January 28, 2023India has multiple official languages and we would like to have the lectures done in all the official languages says @iitmadras Director prof. V Kamakoti#G20India @PMOIndia @narendramodi @g20org @EduMinOfIndia @PIBHRD @MIB_India @PIB_India @airnewsalerts @DDNewslive pic.twitter.com/SRB2t9rAXL
— PIB in Tamil Nadu (@pibchennai) January 28, 2023
ஜி20 கல்விப்பணி குழுவின் கருத்தரங்கில் 900 பேர் மொத்தம் கலந்து கொள்ள உள்ளனர். கருத்தரங்கில் கலந்து கொள்ள பொது மக்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிடலாம். பள்ளிக்கல்வி, கல்லூரி கல்வி மற்றும் திறன் (SKILL) மேம்படுத்தல் குறித்து கருத்தரங்கில் விவாதம் நடைபெற உள்ளது. அதுமட்டுமின்றி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சி வழங்கப்படுவது குறித்து விவாதம் நடைபெற உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் ஓர் 'கூகுள் குட்டப்பா'; பள்ளி மாணவன் கண்டுபிடித்த சூப்பர் ரோபோ!