சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இன்று (மார்ச் 28) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கீதா லட்சுமியை தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என்.ரவி நியமனம் செய்துள்ளார். மேலும் இவர் பதவி ஏற்றுக் கொண்டது முதல் மூன்று ஆண்டுகள் துணைவேந்தராக பணியில் இருப்பார். துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள கீதாலட்சுமி 26 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் அனுபவம் மிக்கவர்.
![வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தராக கீதாலட்சுமி நியமனம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-tnau-vc-appointed-script-photo-vedio-7204807_28032022181217_2803f_1648471337_106.jpg)
முனைவர் பட்ட ஆராய்ச்சியார்கள் 14 பேருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். மேலும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளார். புதிய வகையிலான மூன்று பயிர்களை கண்டறிவதற்கும், எட்டு புதிய தொழில்நுட்பங்களின் மேம்பாட்டிற்கும் பங்காற்றி உள்ளார்.
மேலும் 115 ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளதுடன், தேசிய மற்றும் சர்வதேச ஆராய்ச்சி திட்டங்களில் பங்கேற்றுள்ளார். மேலும் 11 புத்தங்களை எழுதி உள்ளார்" எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் பாலியல் விழிப்புணர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ்