சென்னை: தமிழ் மொழியின் ழகரத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் *THAMIZH* என்று எழுத நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றியழகன் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
தமிழ் மொழியில் *ழ*கரத்தின் சிறப்பை நாம் அறிவோம். ஆனால், தமிழை ஆங்கிலத்தில் எழுதும்போது Tamil என எழுதுவது வழக்கமாக தற்போது உள்ளது. அதனை மாற்றி ழகரத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் *THAMIZH* என்று எழுத நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென முதலமைச்சருக்கு வெற்றியழகன் எம்எல்ஏ சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார்.
தமிழ் to Tamizh:
இதுகுறித்து சட்டப்பேரவையில் அவர் பேசுகையில், தமிழ் மொழியில் *ழ*கரம் என்பதன் சிறப்பை நாம் அறிவோம். ஆனால், தமிழை ஆங்கிலத்தில் எழுதும்போது Tamil என எழுதுவது வழக்கமாக தற்போது உள்ளது. அதனை மாற்றி ழகரத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் *THAMIZH* என்று எழுத நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென முதலமைச்சருக்கு எனது வேண்டுகோளை விடுக்கின்றேன் என்றார்.
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளி:
தொடர்ந்து பேசிய அவர், பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் பச்சையப்பன் கல்வி நிலையங்கள் சிறந்த கல்வி சேவைகளை ஆற்றி வருகிறது. எனவே பச்சையப்பன் கல்வி நிலையங்களை ஒருங்கிணைத்து பச்சையப்பன் பல்கலைக்கழகத்தை அமைக்க முதலமைச்சர் முன்வர வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச அலைபேசி மற்றும் பிராட்பேண்ட் வசதியை ஏற்படுத்த வேண்டும். புதிய தொழில்நுட்பங்களை பள்ளிகளில் அறிமுகம் செய்து கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும்.
மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடுகளும், புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும். சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையை பெங்களூரில் உள்ள உயர்தர மனநல மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும்.
ஆட்டிசம் குறைபாடு, கல்வி கற்றலில் குறைபாடு இன்னும் பிற மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பள்ளியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு எதிராக மதனின் புதிய ஆடியோ - பரபரப்பு தகவல்