ETV Bharat / state

சென்னை ஸ்மார்ட் சிட்டி- நகர்ப்புற ஏழைகளுக்கு பயனளிக்கிறதா? - chennai smart city project

சென்னை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டம் கீழ் முடிவடைந்த 37 திட்டம் நடுத்தர மக்களுக்கும், மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே உதவிகரமாக உள்ளது என ஐ.ஆர்.சி.டி.யு.சி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

urban-poor-and-working-class-not-benefit-in-chennai-smart-city-project
ஸ்மார்ட் சிட்டி திட்டம்- நகர்ப்புற ஏழைகளுக்கு பயனளித்ததா?
author img

By

Published : Aug 5, 2021, 7:34 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.ஆர் சி.டி.யு.சி (information and resource centre for the The Deprived urban communities) என்ற நிறுவனம் அண்மையில் ஆய்வு மேற்கொண்டது.

இந்த ஆய்வுக்கான தகவல்கள் அனைத்தும் மாநகராட்சி இணையதளத்தின் மூலம் சேகரிக்கப்பட்டு, ஆய்வு முடிவுகளை அந்நிறுவனம் கடந்த திங்களன்று (ஆக. 2) வெளியிட்டது.

அதில், "2,476 கோடி ரூபாய்க்கு 126 திட்டங்கள் செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதில், 600 கோடி ரூபாயில் 37 திட்டங்கள் முடிவு அடைந்துள்ளன. 917 ரூபாயில் 44 திட்டங்கள் செயல்பாட்டில் இருந்துவருகின்றன.

அதுபோல், 959 கோடி ரூபாயில் 45 திட்டங்கள் டெண்டர் விடப்பட்டுள்ளன. சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட 37 திட்டங்களில் 7 திட்டங்கள் மட்டுமே அடித்தட்டு மக்களுக்கு உதவிகரமாக உள்ளது. 184.21 கோடி செலவில் ரூ. 3.89 கோடி மட்டுமே அடித்தட்டு மக்களுக்கு பயனளித்துள்ளது.

urban-poor-and-working-class-not-benefit-in-chennai-smart-city-project
ஐ.ஆர்.சி.டி.யு.சி

மாற்றுத்திறனாளிகளுக்கு பயனில்லை

மாற்றுத்திறனாளிகளுக்கான நான்கு திட்டங்கள் தியகராய நகரைச் சுற்றி மட்டுமே உள்ளது. நகரத்தின் மற்ற இடங்களிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தத்திட்டம் பயனளிக்காத வகையில் உள்ளது. தியாகராய நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமல்படுத்தியதால் பல தெரு விற்பனையாளர்கள் தங்கள் வாழ்வாதரத்தை இழந்துள்ளனர்.

மாற்று இடங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுடன் எந்தவித ஆலோசனையும் இல்லாமல் திட்டமிடப்பட்டதால், அது விற்பனையாளர்களுக்கு பயனளிக்கவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 2015 முதல் 2020 வரையில், 69 இடங்களில் குடியிருப்புகளை அகற்றியுள்ளனர்.

நகர்ப்புற ஏழைகளுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டம் பயனளிக்கவில்லை

ஓவியத்திற்கு பதில் அடிப்படை வசதி

இந்த ஆய்வு குறித்து ஐ.ஆர்.சி.டி.யு.சி. பிரதிநிதி வனேசா பீட்டரிடம் கேட்டபோது, "சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்பாக மக்கள் பிரச்சினையை அரசுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கொண்டுவரப்பட்ட திட்டம் ஏழை மக்களுக்கு உதவியாக இருக்கவேண்டும். அது மட்டுமில்லாமல் ஒரு திட்டம் எடுத்து வருவதற்கு முன்பு, திட்டத்தை செயல்படுத்தும் இடத்தில் உள்ள மக்களிடம் தெளிவாக விளக்கவேண்டும்.

ஸ்மார்ட் சிட்டித் திட்டப்பணிகள்

அதுமட்டுமின்றி வழிகாட்டு நெறிமுறைகளையும் சரியாக பின்பற்றவேண்டும். ஆக்கிரமிப்பு எனக்கூறி பல மக்களை கண்ணகி நகர், பெரும்பாக்கம் போன்ற இடங்களில் மறுகுடியமர்வு செய்திருக்கிறார்கள். ஆனால், அங்கு சரியான வசதி இருக்கிறதா என்பதை அரசு கண்டுகொள்வதில்லை.

மாணவர்களின் கல்வி பாதிப்பு

கல்வியாண்டுக்கிடையில் ஆக்கிரமிப்பு என்று குடியிருப்புகளை அகற்றுவதால் அங்கிருக்கும் குழந்தைகளின் நிலைமை கேள்விக்குறியாகிறது. கண்ணகி நகரில் உள்ள கட்டிடங்களில் ஓவியங்கள் வரைந்து இருக்கிறது.

கண்ணகி நகர் ஓவியம்

அந்த ஓவியத்திற்கு பதிலாக அங்கு தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை செய்துதரலாம். எனவே, ஏழை மக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: அனைத்து துறைகளிலும் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து ஆய்வு - அமைச்சர் மூர்த்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.