சென்னை: இந்தியா முழுவதும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிக்களுக்கான தேர்வுகள் 7, 8, 9, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற முதல்நிலைத்தேர்வில் தேர்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் பங்கேற்கின்றனர்.
இந்தியாவில் கரோனோ பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், பல மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனிடையே நடைபெற உள்ள முதன்மைத்தேர்வுகளில் பங்கேற்க வரும் தேர்வர்கள், தேர்வு நாட்களில் தேர்வுகளுக்கு வந்து செல்லக்கூடிய வகையில் பேருந்து போக்குவரத்தை தடையில்லாமல் இயக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் ஊரடங்கு கட்டுபாடுகள் உள்ள மாநிலங்களில் தேர்வுக்கு செல்லும் தேர்வர்கள் தங்களின் தேர்வுகூட நுழைவுச்சீட்டை காட்டினால் அனுமதிக்க வேண்டும் எனவும் அறுவுறுத்தியுள்ளது. தற்போது கரோனோ பரவல் இந்தியாவில் அதிகரித்துள்ள நிலையில், முதன்மைத்தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஸ்டான்லி மருத்துவமனையில் 300 படுக்கைகள் தயார்