ETV Bharat / state

பாதுகாப்பற்ற முறையில் மழைநீர் வடிகால் பணி: மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Oct 27, 2022, 7:10 PM IST

வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் அமைந்திருக்கும் சென்னை மாநகராட்சி அங்கன்வாடி வெளியில் பாதுகாப்பற்ற முறையில் மழைநீர் வடிகால் பணியானது நடைபெற்று வருகிறது என குற்றம்சாட்டி மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆர்ப்பாட்டம்

சென்னை: வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகரில் அமைந்திருக்கும் சென்னை மாநகராட்சி அங்கன்வாடி வெளியில் பாதுகாப்பற்ற முறையில் மழைநீர் வடிகால் பணியானது நடைபெற்று வருகிறது என குற்றம்சாட்டி மக்கள் நீதி மய்யம், மழைநீர் வடிகால் பணி கள ஆய்வு மற்றும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், சினேகா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாநகராட்சி எதிராகவும் திமுக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது மாநிலச் செயலாளர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், "சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அங்கன்வாடி மையத்திற்கு வெளியே மழைநீர் வடிகால் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது.

சாலையில் இருந்து அந்த மையத்திற்கு செல்ல பலகை மூலம் வழி செய்துள்ளனர். ஆனால் அது அதிக எடையை தாங்க முடியாது. இதனால் அங்கு வரும் பெற்றோர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதை சரி செய்ய வேண்டும் என மாநகராட்சி இடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அருகில் இருக்கும் டாஸ்மார்க் பகுதியில் மழைநீர் வடிகால் பணியை முழுமையாக முடித்துள்ளனர். ஆனால் இந்த குழந்தைகள் மையம் இருக்கும் பகுதியில் மழைநீர் வடிகால் பணியினை புகார் அளித்தும் தீர்வு இல்லை. அதுமட்டுமின்றி நேதாஜி நகரில் இந்த மழை நீர் பணியினால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் பணியை மாநகராட்சி இந்த பகுதியில் முடிக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு உளவுத்துறையைப்பலப்படுத்த வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.