ETV Bharat / state

அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை! - tamilnadu school education department news

சென்னை: தொடர் அங்கீகாரமின்றி செயல்பட்டுவரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து நிரந்தரமாக மூடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.

tamilnadu school education department latest news
author img

By

Published : Nov 4, 2019, 5:20 PM IST

தமிழ்நாட்டில் இயங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மூன்று ஆண்டிற்கு ஒருமுறை தொடர் அங்கீகாரம் பெறவேண்டும். இந்தாண்டு தொடர் அங்கீகாரம் பெறாமல் இயங்கிவரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். மேலும் விரைவில் பள்ளிகள் அங்கீகாரம் பெற வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினர். ஆனாலும் 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட கல்வி அலுவலர் தொடர் அங்கீகாரம் பெறாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ”பள்ளிக்கல்வித் துறையின் அரசாணை, வழிகாட்டு நெறிமுறைகள், விதிமுறைகள் ஆகியவற்றின்படியும், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படியும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அரசின் அங்கீகாரமின்றி செயல்படக் கூடாது. துறை அனுமதியின்றி பள்ளி செயல்படுவது விதிகளுக்கு முரணான செயலாகும். அவ்வாறு பள்ளிகள் செயல்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டும். அதன்பின்னும் பள்ளிகள் செயல்பட்டால் நாள் ஒன்றுக்கு 10,000 ரூபாய் வீதம் அபராதமாக விதிக்க வழிவகையுள்ளது.

எனவே இது நாள் வரையில் தங்கள் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் பெறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அப்பள்ளிகள் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால் துறை ரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் அங்கீகாரத்திற்கான விண்ணப்பத்தினை முழு வடிவில் அளிக்க வேண்டும்.

விண்ணப்பம் அளிக்காமலிருந்தால் விதிகளைப் பின்பற்றி அப்பள்ளிகளை நிரந்தரமாக மூடி சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முதன்மைக் கல்வி அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும். அங்கீகாரம் பெறாமல் பள்ளி நடத்தும் உங்கள் மீது ஏன் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. அங்கீகாரம் பெறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாணவர் நலன் கருதி மேலும் காலம் தாழ்த்தாமல் பதிலளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உண்டு;ஆனாலும் ஃபெயில் ஆக்க மாட்டோம்'

Intro:தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை

Body:தொடர் அங்கீகாரம் இன்றி செயல்படும் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை

சென்னை,
தொடர் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் இயங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மூன்று ஆண்டிற்கு ஒருமுறை தொடர் அங்கீகாரம் பெறவேண்டும்.
இந்தாண்டு தொடர் அங்கீகாரம் இல்லாமல் இயங்கிவரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வெளியிட்டனர். அப்பொழுது விரைவில் அங்கீகாரம் பெற வேண்டுமென அறிவுரை வழங்கினர்.
ஆனாலும் தற்போதும் 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் தற்பொழுதும் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வரும் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை செய்துள்ளது.

சென்னை மேற்கு மாவட்ட கல்வி அலுவலர் தொடர் அங்கீகாரம் பெறாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் , இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படியும் பள்ளிகள் அரசின் அங்கீகாரம் இன்றி செயல்பட கூடாது.
துறை அனுமதியின்றி பள்ளி செயல்படுவது விதிகளுக்கு முரணான செயலாகும். இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளிகள் அரசு ஒப்புதல் இன்றி செயல்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டும், அதன்பின்னும் பள்ளி செயல்பட்டால் நாள் ஒன்றுக்கு 10,000 அபராதமாக விதிக்க வழிவகை உள்ளது.

இதுநாள் வரையில் தொடர்அங்கீகாரம் பெறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால் துறை ரீதியாகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் அங்கீகாரத்திற்கான விண்ணப்பத்தினை முழு வடிவில் அளிக்க வேண்டும். விண்ணப்பம் அளிக்காமல இருந்தால் விதிகளைப் பின்பற்றி தங்கள் பள்ளியில் நிரந்தரமாக மூட சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும்.
அங்கீகாரம் பெறாமல் பள்ளி நடத்தும் உங்கள் மீது ஏன் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது எனவும், அங்கீகாரம் பெறுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாணவர் நலன் கருதி மேலும் காலம் தாழ்த்தாமல் பதிலளிக்க வேண்டுமென பதில் கூறியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.