ETV Bharat / state

காவிரி பிரச்னை தொடர்பாக மேலாண்மை ஆணையத்திற்கு அறிவுறுத்தல்... ஒன்றிய அமைச்சர் உறுதி! - union minister jal shakti

தமிழ்நாட்டு மக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதாக ஒன்றிய ஜல் சக்தித் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

Cauvery
காவிரி
author img

By

Published : Jul 20, 2023, 3:36 PM IST

சென்னை: கர்நாடக அரசு சார்பில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கும், தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் சரியான நீர்ப் பங்கீடு செய்வதற்கும் தேவையான முறையை செயல்படுத்துவதற்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதாக ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீரினை தமிழ்நாட்டிற்கு அளித்திடக்கோரி, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்கக்கோரி ஒன்றிய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். அதனைத் தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து அந்த கடிதத்தை அளித்தார்.

பின்னர் ஒன்றிய அமைச்சரிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், கர்நாடக அரசு இதுவரை தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய காவிரி நீரை அளிக்காததால் தமிழ்நாட்டில் நிலவும் நீர்ப் பற்றாக்குறை பற்றியும் எடுத்துரைத்தார். இத்தகைய கடினமான சூழலில், குறுவை பயிரினை காக்க, கர்நாடக அரசு உடனடியாக காவிரி நீரை திறந்திட வேண்டும் எனவும், மேலும், இந்தப் பிரச்சனையில் தலையிட்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாத வாரியாக நிர்ணயிக்கப்பட்ட நீரினை வழங்குமாறும், நீர் குறைபாட்டை ஈடு செய்யுமாறும், கர்நாடகாவிற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிடத் தேவையான அறிவுறுத்தல்களை காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதற்கு ஒன்றிய ஜல் சக்தித்துறை அமைச்சர், "கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடுவதற்கும், நீர்ப் பற்றாக்குறை காலங்களில் சரியான நீர் பங்கீடு செய்வதற்குத் தேவையான முறையை செயல்படுத்துவதற்கும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்குத் தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Kanguva Glimpse: சூர்யா பிறந்தநாளில் கங்குவா அப்டேட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.