சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரம் பகுதியில் கல் குட்டை ஒன்று உள்ளது. இந்த கல்குட்டை அருகே வசிக்கும் பொதுமக்கள் அந்தக் குட்டையில் துணிகள் துவைப்பது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் அப்பகுதி மக்கள் கல்குட்டையில் துணி துவைப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது குட்டையின் கரை ஓரத்தில் 50 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலுல் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இறந்த நபர் யார்? கொலை செய்யபட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்!