சென்னை: தமிழ்நாடு அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தை தொடர்ந்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு அமைச்சராக பதவியேற்றார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி உதயநிதி ஸ்டாலினுக்கு பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இவ்விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா மற்றும் பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி, சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், ஜவாஹிருல்லா, மார்சிஸ்ட் சட்டமன்ற கட்சி தலைவர் நாகை மாலி, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
"தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசு"
அமைச்சராக பதவியேற்ற பிறகு தனது டிவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், "எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.
-
எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர்@mkstalin அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன். pic.twitter.com/M43S8kRcFO
— Udhay (@Udhaystalin) December 14, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர்@mkstalin அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன். pic.twitter.com/M43S8kRcFO
— Udhay (@Udhaystalin) December 14, 2022எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர்@mkstalin அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன். pic.twitter.com/M43S8kRcFO
— Udhay (@Udhaystalin) December 14, 2022
அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவின் மூன்றாம் தலைமுறை வாரிசாகிறாரா உதயநிதி? - ஓர் அலசல்!