ETV Bharat / state

உதயநிதி ரசிகர் மன்றத்தில் சோதனை... காரணம் என்ன?

உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற செயலாளர் பாபு நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மூன்றாவது நாளாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

enforcement office
அமலாக்கத்துறை சோதனை
author img

By

Published : May 19, 2023, 1:11 PM IST

Updated : May 19, 2023, 1:49 PM IST

சென்னை: எழும்பூர் எத்திராஜ் சாலையில் வழக்கறிஞர் அலுவலகம் நடத்தி வருபவர் பாபு. அதே அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளையின் வரவு செலவு போன்ற அனைத்தையும் இவரே பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் (மே.17) ஆம் தேதி மதியம் பாபு அலுவலகத்திற்கு சென்று அறக்கட்டளை மற்றும் ரசிகர் மன்றம் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்ததாக கூறப்படுகிறது. பின்னர் அன்று இரவு 11 மணிக்கு இந்த சோதனை நடந்து முடிந்தது.

சுமார் 12 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை நடைபெறும் போது பாபு அலுவலகத்தில் இல்லை என்பதால், நேரில் ஆஜராக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று அவர் நேரில் ஆஜாராகினார் என்பது குறிப்பிடத்தக்கது. காலை 10 மணியளவில் ஆவணங்களை சமர்ப்பித்து நேரில் ஆஜரானார். அதனைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 2 மணி நேரம் பாவுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மீண்டும் பாவுவை மறுநாள் விசாரணைக்கு படி தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து அவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விளக்கம் அளிக்க பாபுவிற்கு சம்மன் கொடுக்கப்பட்டது. அதன்படி பாபு இரண்டாவது நாளாக நேற்று ஆஜாராகினார். அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உதயநிதி நண்பர் வீடு, ரசிகர் மன்ற நிர்வாகி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும், அதன் அடிப்படையில் உதயநிதியிடமும் விசாரணை நடத்த திட்டம் உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மூன்றாவது நாளாக பாபு விசாரணைக்காக இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.

இதையும் படிங்க: 50 வருட பழமையான ஆலமரத்திற்கு உயிர் கொடுத்த தஞ்சை கலெக்டர்!

Last Updated : May 19, 2023, 1:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.