ETV Bharat / state

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் "ஜெய் ஸ்ரீராம்" கோஷம்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்! - modi

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரிஸ்வானுக்கு எதிராக "ஜெய் ஸ்ரீராம்" என ரசிகர்கள் கோஷமிட்டதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

udhayanidhi-stalin-condemns-indian-cricket-fans-reacts-opposite-to-pak-cricketer

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 15, 2023, 11:14 AM IST

Updated : Oct 15, 2023, 11:20 AM IST

சென்னை: 13வது ஐசிசி உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதனிடையே, இந்த ஆட்டத்தின்போது, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவியலியன் திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது சில ரசிகர்கள் அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதேபோல், இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறும்போது ”ஜெய் ஸ்ரீராம்" என பாடல் ஒலிக்கப்பட்டதும் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. சர்வதேச போட்டி நடைபெறும் மைதானத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தைப் போற்றும் வகையில் பாடல் ஒலிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • India is renowned for its sportsmanship and hospitality. However, the treatment meted out to Pakistan players at Narendra Modi Stadium in Ahmedabad is unacceptable and a new low. Sports should be a unifying force between countries, fostering true brotherhood. Using it as a tool… pic.twitter.com/MJnPJsERyK

    — Udhay (@Udhaystalin) October 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது x தளத்தில் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு கூறியிருப்பதாவது, விரும்தோம்பலுக்கு புகழ் பெற்ற இந்தியாவில், பாகிஸ்தான் வீரர்களுக்கு எதிரான அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும், விளையாட்டு என்பது ஒருங்கிணைந்த சக்தியாகவும், உண்மையான சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், விளையாட்டை வெறுப்பு பரப்பும் கருவியாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து மறுப்பு; திமுக சார்பில் மாபெரும் போராட்டம்.. சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா அறிவிப்பு!

Last Updated : Oct 15, 2023, 11:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.