ETV Bharat / state

300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய உதயநிதி!

சென்னை: பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தூய்மைப் பணியாளர்கள் 300 பேருக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

udhayanidhi
udhayanidhi
author img

By

Published : Sep 26, 2020, 10:22 PM IST

செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாள், திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகிய மூன்றையும் இணைத்து முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி முப்பெரும் விழாவாக அறிவித்திருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் திமுக சார்பில் ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது.

அதேபோன்று இந்தாண்டு சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்துகொண்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது, ஆன்லைன் வகுப்பில் படிக்க இயலாத ஏழை எளிய மாணவர்களுக்கு மடிக்கணினி, செல்போன் வழங்கியும், அதேபோல் ஐஏஎஸ் படிக்கும் மாணவர்களுக்கு தேவையான புத்தகத்தையும் வழங்கினார்.

ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவி

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்குத் தையல் இயந்திரங்களும், தூய்மைப் பணியாளர்கள் 300 பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் அடங்கிய பையினை வழங்கி சிறப்பித்தார்.

இதையும் படிங்க: 78 குண்டுகள் முழங்க பாடும் நிலா பாலுவின் உடல் நல்லடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.