ETV Bharat / state

ஐக்கிய அமீரக அரபு நாடுகளுக்கான விமானங்கள் 10 நாள்களுக்கு ரத்து! - ஐக்கிய அமீரக அரபு நாடுகளுக்கான விமானங்கள் ரத்து

சென்னை: இந்தியாவிலிருந்து துபாய், சாா்ஜா, அபுதாபி செல்லும் அனைத்து சா்வதேச விமானங்களும் பத்து நாள்களுக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளன.

flight
flight
author img

By

Published : Apr 25, 2021, 10:59 AM IST

இந்தியாவில் தற்போது கரோனா வைரசின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. அதுமட்டுமல்லாது தற்போது அதிக பாதிப்பிற்குள்ளான உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இச்சூழலில் இந்தியப் பயணிகளை தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு பிரிட்டன், ஃபிரான்ஸ், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏற்கனவே தடைவிதித்துள்ளன. இந்நிலையில், ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சாா்ஜா, அபுதாபி நாடுகள் இன்று (ஏப்ரல் 25) அதிகாலையிலிருந்து அடுத்த 10 நாள்களுக்கு இந்தியாவிலிருந்து தங்கள் நாட்டிற்கான நேரடி விமான போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.

இதையடுத்து சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஏா் இந்தியா, இண்டிகோ, எமரேட்ஸ், ஃபிளை துபாய் விமானங்களும், அதைப்போல் சாா்ஜா செல்லும் ஏா் இந்தியா, இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானங்களும், அபுதாபி செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, எத்தியாடு ஏா்லைன்ஸ் விமானங்கள் என மொத்தம் 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் அடுத்த 10 நாள்களுக்கு ரத்துசெய்யப்படுவதாக அந்தந்த விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அதே நேரத்தில் ஐக்கிய அரபு நாடுகளைச் சோ்ந்தவா்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அத்தோடு ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள தூதரகங்களில் பணியாற்றும் இந்தியா்கள், அரசு முறையிலான பயணம் செய்யும் இந்தியா்கள், ஐக்கிய அரபு நாடுகள் வழியாக மற்ற நாடுகளுக்குச் செல்லும் டிரான்சிஸ்ட் பயணிகள் இந்தச் சிறப்பு விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள்.

இந்தச் சிறப்பு விமானங்களில் பயணிப்பவா்கள், பயண நேரத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக கரோனா மருத்துவப் பரிசோதனை செய்து தொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அத்தோடு ஐக்கிய அரபு நாடுகளில் சென்று இறங்கியதும், அவா்கள் செலவில் தங்களை 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த 14 நாள்களில், 4ஆவது, 8ஆவது நாள்களில் பயணிக்கு ஐக்கிய அரபு நாட்டின் சுகாதாரத் துறையினா் இரண்டு முறை கரோனா மருத்துவப் பரிசோதனை நடத்துவாா்கள். இதில் தொற்று இல்லை என வந்தால் அவர்களை அரபு நாட்டிற்குள் அனுமதிப்பர். பாசிட்டிவ் இருந்தால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள் போன்ற பல கட்டுப்பாடுகளை அரபு அமீரகம் விதித்துள்ளது.

அதே நேரத்தில் ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியா்கள் இந்தச் சிறப்பு விமானங்களில் இந்தியா திரும்பிவருவதற்குக் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. அவா்கள் வழக்கம்போல் சிறப்பு விமானங்களில் சென்னை உள்ளிட்ட இந்தியாவிற்கு வரும் விமானங்களில் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளைத் தொடா்ந்து வளைகுடா நாடுகளான கத்தாா், ஓமன், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளும் இந்தியாவிற்கான சிறப்பு விமான சேவைகளை ரத்துசெய்துள்ளன.

இதையடுத்து இன்று (ஏப்ரல் 25) சென்னைக்கு மஸ்கட்டிலிருந்து வரவேண்டிய ஓமன் ஏா்லைன்ஸ், தோகாவிலிருந்து வரவேண்டிய கத்தாா் ஏா்லைன்ஸ், குவைத்திலிருந்து வரவேண்டிய குவைத் ஏா்லைன்ஸ் ஆகிய விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. அத்தோடு இங்கையிலிருந்து சென்னை வரவேண்டிய இரண்டு ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானங்களும் இன்று (ஏப்ரல் 25) ரத்து செய்யப்படுகின்றன.

ஆனால் ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகள் உள்பட அனைத்து நாடுகளிலிருந்தும் சென்னை உள்பட இந்தியாவிற்கு சரக்கு விமானங்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.