பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தென்னக ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்கள் ஆங்கிலம், இந்தி மட்டும் பேச வேண்டும் என்ற தவறான சுற்றறிக்கையை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதை பார்க்கும்போது இந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதை தடுக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படி தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயினை சந்தித்து இந்தி திணிக்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட கூடாது என கோரிக்கை மனு அளித்தோம்.
அதுமட்டுமின்றி ஏற்கனவே உள்ள முறையை அமல்படுத்த வேண்டும் எனவும் கூறினோம். மனுவை பெற்றுக்கொண்ட அவர் எங்கள் முன்னரே உடனடியாக புதிய சுற்றிக்கையை ரத்து செய்து, முன்புபோல அனைத்து மொழிகளும் பயன்படுத்தப்படும் என உறுதி அளித்துள்ளார்.
மேலும், ரயில்வே பொதுமேலாளர் எங்களது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் பெரியளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்கு அவர் வாய்ப்பளிக்காமல் எங்கள் கோரிக்கையை உடனடியாக ரத்து செய்துள்ளார்” என்றார்.