ETV Bharat / state

திடீரென பற்றி எரிந்த இருசக்கர வாகனம்...!

சென்னை கோயம்பேடு சந்தை எதிரே, டீ வியாபாரியின் இருசக்கர வாகனம் திடீரென பற்றி எரிந்தது.

author img

By

Published : Mar 14, 2022, 9:09 AM IST

two wheeler caught fire  two wheeler caught fire near Koyambedu Market  Koyambedu Market  two wheeler caught fire in chennai  பற்றி எரிந்த இருசக்கர வாகனம்  திடீரென பற்றி எரிந்த இருசக்கர வாகனம்  கோயம்பேடு அருகே தீபிடித்த வாகனம்
பற்றி எரிந்த இருசக்கர வாகனம்

சென்னை: ஜாபர்கான்பேட்டை பழனியப்பன் பகுதியை சேர்ந்தவ்ர் கணேசன் (45). இவர் கோயம்பேடு சந்தை அருகே, இருசக்கர வாகனத்தில், டீ, பிஸ்கட் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று (மார்ச் 13) கோயம்பேடு சந்தை பகுதியிலுள்ள அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் அருகே, இவர் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது.

இதனைக் கண்டு சுதாகரித்துக்கொண்ட கணேசன், வாகனத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது வாகனம் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன், ஜே ஜே நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள், தீயை முழுமையாக அனைத்தனர். ஆனால் இருசக்கர வாகன முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலம் வந்த ரயிலில் கட்டுக் கட்டாகப் பணம், நகைகள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.