சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.சாலையில் நடைபெற இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளும் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
இந்நிலையில், தவெக சார்பில் மாநில மாநாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் செயல்வடிவக் குழுக்கள் அமைக்கப்படுள்ளன என்று அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி, மாநாடு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர பொருளாதாரக் குழு, சட்ட நிபுணர் குழு, வரவேற்புக் குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு, சுகாதாரக் குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு, வாகன நிறுத்தக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
#வெற்றிக்_கொள்கைத்_திருவிழா#தவெக_மாநாடு #விக்கிரவாண்டி#தமிழக_வெற்றிக்_கழகம்#TVKVijay@tvkvijayhq @BussyAnand pic.twitter.com/KOj9vNPQCI
— TVK Party Updates (@TVKHQUpdates) October 12, 2024
அதேபோல அவசரகால உதவிக் குழு, கொடிக்கம்பம் அமைப்புக் குழு, வழிகாட்டுதல் குழு, வானிலை தகவல் பகிர்வு குழு, கட்டுப்பாட்டு அறைக் கண்காணிப்புக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு, சமூக ஊடகக் குழு, பேச்சாளர்கள் மற்றும் பயிற்சிக் குழு, விளம்பரக் குழு, தூய்மைப் பணிக் குழு, நிலம் ஒப்படைப்புக் குழு ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் மட்டும் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 200க்கும் அதிகமான நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்