ஹைதராபாத்: இந்தியா -வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 3வது டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
சிக்ஸர் மழை: அதன் படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கினர். இதில் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய அபிஷேக் சர்மா, அதற்கு அடுத்த பந்திலே விக்கெட் இழந்து வெளியேறினார்.
A perfect finish to the T20I series 🙌#TeamIndia register a mammoth 133-run victory in the 3rd T20I and complete a 3⃣-0⃣ series win 👏👏
— BCCI (@BCCI) October 12, 2024
Scorecard - https://t.co/ldfcwtHGSC#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/BdLjE4MHoZ
இதன் பிறகு சஞ்சு சாம்சன் மற்றும் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இணைந்து வங்கதேசத்தை துவம்சம் செய்தனர். குறிப்பாக ரிஷாத் ஹொசைன் வீசிய 20 ஓவரில் சஞ்சு சாம்சன் 5 சிக்கர்களைப் பறக்க விட்டார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி அவர் 40 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்து 111 ரன்னில் ஆட்டமிழந்தார்.
Sublime century, records broken and flurry of sixes 💥#TeamIndia were unstoppable in Hyderabad tonight 💙
— BCCI (@BCCI) October 12, 2024
Scorecard - https://t.co/ldfcwtHGSC#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/cgW66Tohxy
மறுமுனையில் சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 5 சிக்ஸர் 8 பவுண்டரி உட்பட 75 ரன் குவித்தார். தொடர்ந்து வந்த ரியான் பராக் 34 ரன்னும், ஹர்திக் பாண்டியா 47 ரன்னும் விளாசியதால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்து சரித்திரம் படைத்துள்ளது.
இதையும் படிங்க: "ரோகித்தும் இல்ல.. கோலியும் இல்ல.. ஆஸ்திரேலிய தொடர்ல அவர் தான் டிரம்ப் கார்டு"- கங்குலி கணிப்பு!
வங்கதேச அணி தரப்பில் தன்சிம் ஹசன் 3 விக்கெட்டுகளையும், மஹ்முதுல்லாஹ், முஸ்தாபிஸூர் மற்றும் தஸ்கின் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 298 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதனால் 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன், வங்கதேச அணியை ஒயிட் வாஷ் செய்தது.
புதிய வரலாறு: டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அதே போல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மங்கோலியாவுக்கு எதிரான போட்டியில் நேபாளம் அணி 314 ரன்கள் குவித்தது முதலாவது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. 3வது மற்றும் 4வது இடம் முறையே 278 ரன்களுடன் ஆப்கானிஸ்தான் அணியும் (அயர்லாந்துக்கு எதிராக), 267 ரன்களுடன் இங்கிலாந்தும் (வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக) உள்ளது.