டெல்லி : நாடு முழுவதும் தசரா பண்டிகையானது நேற்று (அக்.12) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், டெல்லி, செங்கோட்டையில் உள்ள மாதவ் தாஸ் பூங்காவில் ஸ்ரீராம் லீலா சங்கம் சார்பில் 211 அடி உயரம் கொண்ட ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இந்த உருவ பொம்மை தான் இந்தியாவின் மிகப்பெரிய உருவ பொம்மை ஆகும்.
இந்த நிகழ்வினில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று (அக்.12) இரவு நடைபெற்ற இந்த தசரா கொண்டாட்டத்தில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் ராமர், லட்சுமணன் மற்றும் அனுமன் வேடங்களில் இருந்த நாடக கலைஞர்களின் நெற்றியில் திலகமிட்டு வணங்கினர்.
Took part in the Vijaya Dashami programme in Delhi. Our capital is known for its wonderful Ramlila traditions. They are vibrant celebrations of faith, culture and traditions. pic.twitter.com/OfxizkzD3B
— Narendra Modi (@narendramodi) October 12, 2024
அதன் தொடர்ச்சியாக, தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாதவ் தாஸ் பூங்காவில் ராவணன், மேகநாதர் மற்றும் கும்பகர்ணன் உருவ பொம்மைகள், குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் முன்னிலையில் எரிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மைசூர் தசரா கொண்டாட்டம்: கவர்ச்சிகரமான காட்சிகளால் ஈர்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள்!
विजयादशमी के अवसर पर पूर्वी दिल्ली की मशहूर श्री रामलीला कमिटी इंद्रप्रस्थ द्वारा आयोजित कार्यक्रम में बुराई के प्रतीक रावण का दहन किया।
— Atishi (@AtishiAAP) October 12, 2024
रावण दहन की ये परंपरा हमें याद दिलाती है कि बुराई कितनी भी शक्तिशाली हो, अच्छाई की विजय निश्चित है।
जय श्रीराम.. pic.twitter.com/aH8tNKzHOO
இதேபோல, ஆம் ஆத்மி சார்பில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அதிஷி கலந்துகொண்டு, ராவணன் உருவ பொம்மை மீது அம்பு எய்தார். அதன் பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த உருவ பொம்மைகள் ஒவ்வொன்றாக எரிக்கப்பட்டது.
विजयादशमी के पावन पर्व पर श्रीमती सोनिया गांधी जी और श्री @RahulGandhi ने प्रभु श्रीराम, माता सीता और हनुमान जी को विजय तिलक लगाया।
— Congress (@INCIndia) October 12, 2024
जय सियाराम 🙏🏼 pic.twitter.com/jeVag9FoU5
आज बुराई पर अच्छाई की जीत के पर्व विजयादशमी के अवसर पर पटना के गांधी मैदान में श्री रामलीला महोत्सव एवं रावणवध समारोह-2024 का उद्घाटन किया। (1/2) pic.twitter.com/DSFG4e88O4
— Nitish Kumar (@NitishKumar) October 12, 2024
இதற்கிடையே, டெல்லியில் உள்ள நவ் ஸ்ரீ தர்மிக் லீலா கமிட்டி ஏற்பாடு செய்த தசரா கொண்டாட்டங்களில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது தாய் சோனியா காந்தி கலந்து கொண்டார். அதேபோல, பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெற்ற செய்த தசரா விழாவில் பீகார் முதலைமைச்சர் நிதீஷ் குமார் பங்கேற்றார்.
இதுமட்டும் அல்லாது மகாராஷ்டிரா, உத்தரகண்ட், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசியல் தலைவர்கள் தலைமையில் தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்