ETV Bharat / state

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்..! பொறியியல் பட்டதாரி உள்பட இருவர் கைது... - சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட பொறியியல் பட்டதாரி உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

two were arrested in chennai  sexual harassment  sexual harassment for woman in chennai  two were arrested in chennai in sexual harassment  sexual harassment for woman  sexual harassment cases  தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறல்  பாலியல் தொல்லை  பாலியல் வழக்குகள்  சென்னையில் இருவர் கைது  சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை  பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது
பாலியல் தொல்லை
author img

By

Published : Aug 10, 2022, 7:04 AM IST

சென்னை: கோயம்பேட்டில் வீடு புகுந்து 27 வயது இளம்பெண்ணிடம் இரண்டு நபர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கட்டுபாட்டு அறைக்கு கிடைத்த தகவலின் படி, கோயம்பேடு காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். குடிபோதையில் இருந்த இரண்டு நபர்களையும் பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தினர்.

இதில் ஒருவர் பொறியியல் பட்டதாரி அரவிந்த் என்பதும், மற்றொருவர் கணேசமூர்த்தி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்,பாதிக்கப்பட்ட பெண் கணவரை பிரிந்து வேறொரு நபருடன் வாழ்ந்து வருவதும், அந்த நபர் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர்கள் இருவரும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பாலியல் தொல்லை கொடுத்து, வற்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக இருவர் மீதும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294 பி- ஆபாசமாக பேசுதல், 448- வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், 506(ii) கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் (பிரிவு 4) ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி உயிரிழப்பு; கணவர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.