ETV Bharat / state

நெல்லை துவார பாலகர் சிலை ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்து மீட்பு!

author img

By

Published : Nov 28, 2019, 8:27 AM IST

சென்னை : 1995ஆம் ஆண்டு நெல்லை கோயிலில் இருந்து கடத்தப்பட்ட இரண்டு துவார பாலகர் கற்சிலைகள் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா கொண்டுவரப்படவுள்ளது என்று சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு  சிலைக்கடத்தல் தடுப்பு பிரவு சிலைகள் மீட்பு  துவாரபாலகர் கற்சிலைகள்  ஆஸ்திரேலிய அருங்காட்சியகம்  pon manickavel  two statue recovery from Australia museum said by pon manickavel
two statue recovery from Australia museum

நெல்லை மாவட்டம் ஆத்தாளநல்லூர் மூன்றீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து இரண்டு துவார பாலகர் கற்சிலைகள் கடந்த 1995ஆம் ஆண்டு திருடுபோனது. இதுகுறித்து நெல்லை காவலர்கள் துப்பு துலக்க முடியாமல் திணறி வந்தனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்த வழக்கை சிலை தடுப்பு பிரிவினர் கையிலெடுத்து விசாரிக்கத் தொடங்கினார்.

விசாரணையில், சிலைகடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரின் கும்பல்தான் கைவரிசையை காட்டியிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, சுபாஷ் சந்திர கபூர், சஞ்சீவ் அசோகன், வல்லப பிரகாஷ், மாமல்லபுரம் லட்சுமி நரசிம்மன், தஞ்சை அண்ணாதுரை, ஊமைத்துரை உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், துவார பாலகர் சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஆஸ்திரேலிய தூதரகம், அங்குள்ள இந்திய தூதரகம், மத்திய தொல்லியல் துறையினருக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கடிதம் எழுதினர்.

இதன் எதிரொலியாக இரண்டு துவார பாலகர் சிலைகளையும் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் ஜனவரி மாதம் இந்த சிலைகளைப் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கவுள்ளதாக சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் மேலும் ஐந்து சிலைகள் இருக்கின்றன என்றும் சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் 16 சிலைகள் இருக்கின்றன என்றும் அவை விரைவில் மீட்கப்படும் எனவும் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அலுவலர் பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : காமராஜர் ஒதுக்கிய ஐஐடி-க்கு சொந்தமான நிலத்தினை முழுமையாக மீட்கவேண்டும்!

Intro:Body:நெல்லை மாவட்டத்தில் திருடப்பட்ட 2 துவாரபாலகர் சிலைகள், ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா வருகிறது.

நெல்லை மாவட்டம் ஆத்தாளநல்லூர் மூன்றீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து 2 துவார பாலகர் கற்சிலைகள் 1995ம் ஆண்டு களவு போனது. நெல்லை போலீசார் இந்த வழக்கில் துப்பு துலக்க முடியாமல் கைவிட்டனர்.
இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்தனர். மூன்று மாதம் நெல்லை மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தியதில் சுபாஷ் சந்திர கபூர் கும்பல் கைவரிசை என தெரியவந்தது.

இதையடுத்து சிலை கடத்தல் மன்னர்களான சுபாஷ் சந்திர கபூர்,சஞ்சீவ் அசோகன், வல்லப பிரகாஷ், மாமல்லபுரம் லட்சுமி நரசிம்மன், தஞ்சை அண்ணாதுரை , ஊமைத்துரை உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் து வாரபாலகர் சிலைகள் ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய தூதரகம், அங்குள்ள இந்திய தூதரகம், மத்திய தொல்லியல் துறையினருக்கு சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கடிதம் எழுதினர்...

இதன் எதிரொலியாக 2 துவார பாலகர் சிலைகளையும் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.
அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் ஜனவரி மாதம் இந்த சிலைகளை பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த 2 துவார பாலகர் கற்சிலைகளின் மதிப்பு 5 கோடி ரூபாயாகும்.

இதேபோல் ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள மேலும் 5 சிலைகள், சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள 16 சிலைகளும் விரைவில் மீட்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.