ETV Bharat / state

வெடி மருந்துடன் பிடிப்பட்ட இலங்கை தமிழர்கள் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை - jailed for 10 years

வெடி மருந்துடன் பிடிப்பட்ட இலங்கை தமிழர்கள் இரண்டு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெடி மருந்துடன் பிடிப்பட்ட இலங்கை தமிழர்கள் இரண்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

author img

By

Published : Oct 18, 2022, 9:45 AM IST

சென்னை: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே கடந்த 2019ஆம் ஆண்டு சங்கேகத்திற்கிடமாக இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சங்கர் நகர் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஜேசு ராஜா என்ற ராஜேந்திரன் மற்றும் கணேசன் என்பதும், அவர்கள் இலங்கை தமிழர்கள் என்றும் தெரிய வந்தது.

வெடிகுண்டு செய்யத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு இருவரும் இலங்கை செல்ல இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த சங்கர் நகர் காவல்துறையினர், அவர்களை சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இவ்வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், குற்றம் சாட்டப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினார். இதனைத்தொடர்ந்து இன்று (அக் 18) நீதிபதி இளவழகன் வழங்கியுள்ள தீர்ப்பில், “குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதிக்கப்படுகிறது.

இந்த அபராதத்தைக் கட்ட தவறினால் மேலும் நான்கு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயராஜ் ஆஜராகி வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெடி மருந்துகளுடன் பிடிப்பட்ட இலங்கை தமிழர்கள் குற்றவாளி என தீர்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.