ETV Bharat / state

கார் மீது லாரி மோதி விபத்து: காரில் சிக்கிய இருவர் மீட்பு..! - Two rescued after truck collided with car In thambaram

சென்னை: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில், காரில் சிக்கிய இருவரை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

தாம்பரத்தில் கார் மீது லாரி மோதி விபத்து  சென்னை லாரி விபத்துகள்  காரில் சிக்கிய இருவர் மீட்பு  Two rescued after truck collided with car  Two rescued after truck collided with car In thambaram  Chennai Lorry Accidents
Chennai Lorry Accidents
author img

By

Published : Dec 3, 2020, 5:31 PM IST

சென்னை, தாம்பரம் டிபி மருத்துவமனை அருகேயுள்ள ஜி.எஸ்.டி சாலையில் கார் ஒன்று கிண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி கார் மீது ஏறி இறங்கியது. இதில், கார் முற்றிலுமாக நசுங்கி சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள சுவற்றில் இடித்து தலைகீழாகக் கவிழ்ந்தது.

இதனால், காரில் சென்ற இருவரும் படுகாயங்களுடன் காரின் உள்ளே சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், அப்பளம் போல் நசுங்கிய காரினை அப்புறப்படுத்தி அதிலிருந்த பெண் ஒருவரை மீட்டனர். அதேபோல், காரினை ஓட்டி வந்தவர் முன்பக்கத்தில் சிக்கிக்கொண்டதால், அவரை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு துறையினர் மீட்டு அவர்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கார் மீது லாரி மோதி விபத்து

மேலும் விபத்தில் சிக்கிய காரை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: டிப்பர் லாரி மோதல்: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பெண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.