சென்னை : ஏமன்,லிபியா நாடுகளில் தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால்,இந்தியா்கள் பாதுகாப்பு நலன் கருதி இந்த இரு நாடுகளுக்கும் செல்லக் கூடாது என ஒன்றிய அரசு கடந்த 2014 ஆண்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
குடியுரிமை அலுவலர்கள் சோதனை
இந்நிலையில் ஏா்அரேபியா சிறப்பு விமானம் சாா்ஜாவிலிருந்து நேற்று(ஜூலை.08) அதிகாலை சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட்,ஆவணங்களை சென்னை குடியுரிமை அலுவலர்கள் சோதனையிட்டனா். அப்போது சென்னையை சோ்ந்த முகமது யாசீன்(30), பீஹாரை சோ்ந்த அன்சா்(31) ஆகிய இருவரின் பாஸ்போா்ட்களை சோதனையிட்டனா்.
அப்போது இருவரும் சில ஆண்டுகளுக்கு வேலைக்காக சவுதி அரேபியா சென்றவா்கள்,சட்டவிரோதமாக ஏமன் நாட்டிற்கு சென்றுது தெரியவந்தது.
இருவர் கைது
இதையடுத்து குடியுரிமை அலுவலர்கள் முகமது யாசீன்,அன்சா் ஆகிய இருவரையும் கைது செய்து,மேல் விசாரணைக்காக சென்னை விமானநிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.பின்னர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: