சென்னை அருகே வடபழனியில் சரவணன் என்பவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் கடந்த 16ஆம் தேதி 7 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியர்களைக் கத்தியால் தாக்கி லாக்கரில் இருந்த ரூ.7 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சினிமா பட பாணியில் அலுவலகத்தின் கதவை உடைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி, தப்பித்தனர்.
அப்போது சரவணன் மற்றும் ஊழியர்கள் பொதுமக்கள் உதவியுடன் கொள்ளைக்கும்பலை விரட்டிச்சென்றனர். அதில் கல்லூரி மாணவரான ரியாஸ் பாஷா என்பவரை மட்டும் மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் கொள்ளையில் தொடர்புடைய கிஷோர் கரண், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் தலைமறைவாக இருந்து ஜானி என்கிற சந்தோஷ், தினேஷ், கண்ணன் ஆகிய இருவரையும் கடந்த 19ஆம் தேதி ராணிப்பேட்டையில் தனிப்படை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 5 லட்சத்தைப் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் இந்த கொள்ளைச்சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை சென்னை மாம்பலம் காவல் நிலையம் துணை ஆணையர் பாரதிராஜன் தலைமையில் உள்ள தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். இஸ்மாயில் மற்றும் பரத் ஆகியோரை கைது செய்து ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க:மின்வாரிய குடியிருப்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான காப்பர், ஆயில் திருடிய இருவர் கைது