சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகரை சேர்ந்த 27 வயது இளம்பெண் தாம்பரம் சி.டி.ஓ காலணியைச் சேர்ந்த மருத்துவர் தீபக் (28) என்பவரின் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று (நவம்பர் 29) காலை வழக்கம்போல் வீட்டு வேலை செய்வதற்காக சென்றார். அப்போது தீபக் அவரது உறவினர் ஆனந்த் அமிர்ராஜ் (34) என்பவருடன் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது பற்றி வெளியே கூறினால் வீட்டில் நகையை திருடிவிட்டதாகக் கூறி காவல் துறையினரிடம் பிடித்து கொடுத்து விடுவேன் என்று மருத்துவர் தீபக் மிரட்டியுள்ளார். இது குறித்து அந்த இளம்பெண் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தாம்பரம் காவல் துறையினர் தீபக் மற்றும் அவரது உறவினர் ஆனந்த் அமிர்ராஜ் இருவரையும் அழைத்து விசாரணை செய்தனர்.
![வீட்டில் வேலை செய்யும் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9708806_thum.jpg)
அப்போது இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: காசிமேட்டில் ஆயுதங்களுடன் ரவுடிகள் கைது