ETV Bharat / state

வீட்டில் புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனை: 2 பேர் கைது - Two man arrested for selling banned tobacco products

சென்னை: இரும்புலியூர் அருகே வீட்டில் வைத்து புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் ஆகியவற்றை விற்பனை செய்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

புகையிலை பொருட்கள், மதுபாட்டில்கள் வீட்டில் விற்பனை செய்த 2 பேர் கைது

author img

By

Published : Aug 5, 2020, 4:27 AM IST

சென்னை இரும்புலியூர் அருகேயுள்ள சத்தியசாய் நகரில் வீட்டில் வைத்து புகையிலைப் பொருட்கள், மதுபாட்டில்கள் விற்பனை நடப்பதாக தாம்பரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தாம்பரம் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் ஆல்பின் ராஜ் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதி முழுவதும் சோதனை செய்தனர். அப்பொழுது அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து புகையிலை பொருட்கள், மது பாட்டில்கள் விற்பனை நடப்பது காவல் துறையினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அதனை விற்பனை செய்த சென்ராய பெருமாள்(37) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 85 கிலோ குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள், 56 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் தாம்பரம் புலிக்கொரடு பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டிகள் விற்பனை செய்த குமார் (31) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 180 மி.லி அளவுள்ள 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள் மீது பல வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிஎஸ்பி வீட்டில் போதைப் பொருள் பறிமுதல்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.