ஆந்திராவிலிருந்து இரண்டு பேர் காரில் கஞ்சா கடத்தி வருவதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை சோழவரம் அடுத்த விஜய நல்லூர் சுங்கச் சாவடியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராமசிவா, முரளி ஆகிய இருவர் தாங்கள் வந்த காரில் 188 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவ்விருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 188 கிலோ கஞ்சாவையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கஞ்சாவை ஒடிசா பகுதியிலிருந்து கடத்திக் கொண்டு வந்து சென்னையில் உள்ள நபரிடம் ஒப்படைக்க வந்ததாகத் தெரிவித்தனர் .
மேலும், இந்த கஞ்சா கடத்தலில் முக்கிய நபர் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் மூலமாகவே பல பகுதிகளுக்கு கஞ்சாவை கடத்திச் செல்கின்றனர் என்பதும் தெரியவந்தது.
இதையும் படிங்க:லண்டன் ட்ரக்கில் இறந்து கிடந்த 39 பேரும் சீனர்கள்!