ETV Bharat / state

அரும்பாக்கம் அருகே விபத்து - இளம்பெண் உட்பட இருவர் பலி - பைக் மீது லாரி மோதி விபத்து

சென்னை அரும்பாக்கம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

lorry collied with bike  lorry collied with bike near arumbakkam  accident  chennai accident  accident near arumbakkam  arumbakkam  chennai news  chennai latest news  bike accident  lorry dashes bike  lorry dash bike
அரும்பாக்கம் அருகே விபத்து
author img

By

Published : Dec 9, 2022, 12:09 PM IST

சென்னை: ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கன்சர்லையா பிரசாத் (30) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாபிலோனா (25) இருவரும், சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கலில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று (டிசம்பர் 8) இரவு பைக்கில் வெளியே சென்று வீட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இவர்கள், அரும்பாக்கம் 100 அடி சாலை மெட்ரோ ரயில் சந்திப்பில் திரும்பும்போது, அவ்வழியாக வந்த சரக்கு லாரி ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது, இவர்கள் மீது லாரி ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர், இருவரது உடலையும் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பொன்னன் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டம் - பொள்ளாச்சி இளைஞர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.