ETV Bharat / state

தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜுக்கு இரண்டு நாட்கள் காவல் நீட்டிப்பு!

author img

By

Published : Jun 12, 2021, 3:16 PM IST

பயிற்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தற்காப்புக்கலை பயிற்சியாளர் கெபிராஜுக்கு, மேலும் இரண்டு நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டு சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் தற்காப்புக் கலை பயிற்சியாளர் கெபிராஜ்.

சென்னை அண்ணா நகரில் தற்காப்புக்கலை பயிற்சி வகுப்பு நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் 19 வயது பயிற்சி மாணவி ஒருவரை, நாமக்கல்லில் நடைபெற்ற தற்காப்புக்கலை போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சென்னை திரும்பும் வழியில் காரில் வைத்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதிக்கப்பட்ட மாணவி புகாரளித்தார்.

புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை, மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 30ஆம் தேதி கெபிராஜ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். பாதிப்புக்கப்பட்ட மாணவி வேறு மாநிலம் என்பதால் வழக்கு, கடந்த 4ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

சிபிசிஐடி விசாரணை அலுவலராக ஆய்வாளர் லதா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கெபிராஜின் நீதிமன்றக் காவல், வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு நாட்கள் கெபிராஜை காவலில் எடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அதன்படி இன்று (ஜூன்.12) பாலியல் தொல்லை நடந்ததாக கூறப்பட்ட இடங்களுக்கு, கெபிராஜ் நேரடியாக அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் அவர் நடத்தி வந்த தற்காப்புக் கலை பயிற்சி மையம், வீடு, உள்ளிட்ட இடங்களுக்கு கெபிராஜை அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விசாரணை முழுவதையும் காணொளியாக பதிவு செய்து, ஆதாரங்களை சேகரிக்கப்பட உள்ளது. புகார் அளித்த மாணவியிடமும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல் வேறு பயிற்சி மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : மது குடிக்க பணம் கேட்டு அண்ணன் மகளை கொல்ல துணிந்த இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.