ETV Bharat / state

சேலையூரில் மின்சாரம் பாய்ந்து இரண்டு பசு மாடுகள் உயிரிழப்பு!

author img

By

Published : Jul 11, 2020, 7:56 AM IST

சென்னை: சேலையூரில் மின் கம்பி அறுந்து விழுந்த மழை நீரைக் கடக்க முயன்ற இரண்டு பசு மாடுகள், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Two cows killed by electricity in Saleiyoor

சென்னை, சேலையூர் அடுத்த காமராஜ் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). இவர் சொந்தமாக 20 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று இரவு(ஜூலை 9) தாம்பரம், அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்ததால், அப்பகுதியில் செல்லும் மின்சாரக் கம்பி அறுந்து, தேங்கி இருந்த மழை நீரில் விழுந்துள்ளது.

இன்று(ஜூலை 10) வழக்கம்போல் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பி வைத்துள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த தண்ணீரைக் கடக்க முயன்ற போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இரண்டு பசு மாடுகள் உயிரிழந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் மின் நிலையத்திற்குத் தகவல் அளித்தவுடன், உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உயிரிழந்த மாடுகளை அப்புறப்படுத்தினர்.

மேலும் ஆட்கள் நடமாட்டம் அதிக அளவில் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.