ETV Bharat / state

சுடுகாட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற சகோதரர்கள் இருவர் கைது! - Pallavaram

சென்னை அடுத்த பல்லாவரம் அருகே சுடுகாட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற சகோதரர்கள் கைது செய்யபட்டனர்.

Two brothers were arrested for trying to sell ganja

author img

By

Published : Aug 1, 2022, 10:37 PM IST

சென்னை: பம்மல் அடுத்த அனகாபுத்தூர் சுடுகாட்டுப்பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக சங்கர் நகர் போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்குரிய வகையில் இருசக்கர வாகனத்தில் கைப்பையுடன் வந்த இருவரை போலீசார் மடக்கிப்பிடித்து சோதனை செய்த போது நான்கு கிலோ கஞ்சா பொட்டலங்கள் வைத்து இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று நடத்திய விசாரணையில், அவர்கள் நந்தம்பாக்கம் பகுதியைச்சேர்ந்த சகோதரர்களான மணிகண்டன் மற்றும் பார்த்திபன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இருவரும் அனகாபுத்தூர் சுடுகாட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றதை ஒப்புக்கொண்டதை அடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சாக்லேட் வடிவத்தில் கஞ்சா விற்பனை - ஜிகே மணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.