சென்னை: வடபழனியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்ரை கொடுத்தார். அதில், தனது செல்போன் எண்ணுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாசமாக பேசுவதாகவும், வாட்சப் எண்ணுக்கு ஆபாசமான தகவல்கள் மற்றும் படங்கள் அனுப்பி தவறான உறவுக்கு அழைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், செல்போன் வாட்சப் மூலம் ஆபாச தகவல்கள் அனுப்பிய சேலத்தைச் சேர்ந்த மணிகண்டன் (எ) மணி (37), இவருக்கு உடந்தையாக இருந்த தியாகராய நகரை சேர்ந்த மதி (எ) மதியழகன்(35), ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்களிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் மதியழகன் முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் உள்ள துணை இல்லாத பெண்களின் விவரங்கள் மற்றும் செல்போன் விவரங்களை எடுத்து, இருவரும் வாட்சப் மூலம் அப்பெண்களுக்கு ஆபாச தகவல்கள் மற்றும் படங்கள் அனுப்பி ஆபாசமாக பேசி தவறான உறவுக்கு அழைப்பதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற வழக்கு: ஜோனாதன் தோர்னுக்கு 2 ஆண்டுகள் சிறை