சென்னை மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி பறக்கும் படை அலுவலர் திருநாவுக்கரசு தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது சரக்கு ஆட்டோ ஒன்றை சோதனை செய்தனர்.
இதில், அந்த வாகனத்தில் 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கிக்கொண்டு சென்றது தெரிந்தது. அதில் இரண்டு டன் அரிசி இருந்தது. அவற்றை பறக்கும் படை அலுவலர்கள் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அரிசி மூட்டைகளை திருவான்மியூர் ஜெயந்தி தியேட்டர் அருகில் ஏற்றி கோடம்பாக்கம் கொண்டு செல்ல இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், ரேசன் அரிசி கடத்திச் சென்ற இருவரை பிடித்து மயிலாப்பூர் காவல்துறையினர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: லைஃப் ஜாக்கெட்டில் மறைத்து வைத்து 2.3 கிலோ தங்கம் கடத்தல்